Friday, July 20, 2018

இளைஞர்களே சற்று சிந்திப்பீர்களா.!?

மரணம் என்பது யாரும் மறுக்க முடியாதது.யாராலும் தடுக்கவும்  முடியாது.அது ஒருநாள் நம்மை நிச்சயம் வந்தே தீரும். அதற்காக மரணத்தை நாம் தேடிப் போகக்கூடாது.இயற்க்கை மரணம் என்பது எல்லோருக்கு மானவை.ஆதலால் பெற்றோர்களும் மற்றோர்களும் எளிதில் ஆறுதல் அடைந்து விடலாம்.

Saturday, July 7, 2018

மனிதன் மாறிவிட்டான்.!?

காலங்கள் கடந்து செல்லச்செல்ல மனிதனின் மனம் கொஞ்சம்கொஞ்சமாக தனது வழியிலிருந்து மாறத்தொடங்கி விட்டது. மனிதன் மாறி விட்டான்.

Saturday, June 23, 2018

தந்தை.

விந்தையிலும் விந்தை 
தந்தையே

நம் உடலின்
ஒவ்வொரு உயிரணுவும்
தந்தைக்குச் சொந்தமானதே

Tuesday, June 19, 2018

இலவசம் இலவசம்.


ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
அறியாதவன் கண்ணுக்கு
ஆனந்தம் பெருமிதம்

Tuesday, June 5, 2018

திருட்டு உலகமுங்க...!!!

திருட்டுத்தனம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எந்தவகைத் திருடர்களாக இருந்தாலும் அவர்களைப் பார்த்து திருடன் என்று சொல்வதுதான் நடைமுறை வழக்கம்.திருடன் என்கிற வார்த்தை பொதுவாக நாம் உபயோகப்படுத்தும் பன்மை அற்த்தம்கொண்ட சொல்லாகும். அதாவது நமக்குத் தெரிந்து கொள்ளையடிப்பவன், குழந்தை கடத்துபவன்,வழிப்பறி செய்பவன், ஏமாற்றுபவன், மோசடிக்காரன், பொய்சொல்பவன் இப்படி பலவகையில் மனிதனுக்கு நஷ்டத்தை தீங்கை விளைவிக்கும் காரியங்களை செய்யக்கூடியவர்களை  திருடன், திருட்டுப் பயல் என்று அழைப்பார்கள்.

Wednesday, May 23, 2018

நோன்புக் கஞ்சி.

நோன்பு மாதம் ஆரம்பம்
நோன்புக் கஞ்சி தாராளம்

Tuesday, May 15, 2018

புனிதமிகு ரமலானே வருக வருக.

புனிதமிகு ரமலானே வருகவருக
இப்புவி செழிக்க
அருள்மழையை தருக தருக

Sunday, May 13, 2018

கவனம்.! குழந்தைகள் பாதுகாப்பில் தேவை கவனம்.!!!

முன்பொரு காலத்தில் நம் வீட்டுக் குழந்தைகளை சுதந்திரமாக சுற்றித்திரிய விட்டு தெருக்குழந்தைகளுடன் விளையாட விட்டு நிம்மதியாக பயமின்றி  நமது மற்ற   வேலைகளில் கவனம் செலுத்தி வந்தோம். குழந்தைகளும் ஆசைதீர சுதந்திரமாக  இஷ்டம்போல் விளையாடிக் களைத்து வியர்த்து சந்தோசமாக பாதுகாப்பாக வீடு திரும்புவார்கள்.

Friday, May 4, 2018

கவிதையே தெரியுமா ?

கவிதைக்குள் மெல்லிய
ஓசையெனும் உயிர்
வேண்டும்

Wednesday, May 2, 2018

யாரைத்தான் நம்புவது.!?!?

நம்பிக்கை என்பது மனிதனுக்குமனிதன் மனசாட்சிப்படி  அவனது சொல்,செயல்,நடவடிக்கையென அனைத்திலும் நம்பகத்தன்மையை நிரூபிக்கும்  மிகச்சிறந்த குணமாகும்.இவ்வுலக வாழ்க்கைக்கு நமக்குத் தேவையான எல்லா விஷயங்களிலுமே நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டுதான் இவ்வுலகில் வாழும்  ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையும் இயங்கிக் கொண்டு இருக்கிறது.

Friday, April 27, 2018

நானும் ரவுடி நானும் ரவுடிதான்.!

ரவுடி என்று ஒருமனிதனைச் சொல்ல நாம் கேட்கும்போதே அச்சம் கலந்த வெறுக்கத்தக்க நபராக சராசரிமனிதனிலிருந்து மாறுபட்டவனாகவே நாம் கருதுகிறோம். காரணம் இந்த பெயர்கொண்டு அழைக்கப்படும் மனிதன் சொல், செயல்,நடவடிக்கை அனைத்திலும் முரண்பாடாக இருப்பதுடன் எந்த ஒரு பாதகச் செயலையும் ஈவிரக்கமின்றி பின்விளைவுகளை யோசிக்காமல் செய்து முடிப்பவனாக இருக்கிறான்.

Saturday, April 21, 2018

நெஞ்சு பொறுக்குதில்லையே ஆஷிஃபா. !!!




நெஞ்சு பொறுக்குதில்லையே
இப்பிஞ்சுக் குழந்தைக்கு நிகழ்ந்த
வன்கொடுமையை நினைக்கையில்
நெஞ்சு பொறுக்குதில்லையே

Monday, April 16, 2018

யார் அந்தத் தீவிரவாதி.!?

இயல்பாகவே தீவிரவாதி என்கிற சொல்லைக் கேட்டாலே நமக்கு ஒருவித அச்சமும்,அதிர்ச்சியும் மனதில் ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த சொல் ஒரு பயங்கர குற்றம் செய்பவர்கள் போன்று நம் எண்ணங்களில் ஆழமாக பதிந்து விட்டது. அதுவும் இப்போதைய காலகட்டத்தில் இந்த சொல்லை நாம் அடிக்கடி பத்திரிகைச் செய்திகளிலும்,காணொளிச் செய்திகளிலும் சமூக வலைதளச் செய்திகளிலும் காணமுடிகிறது.

Wednesday, April 11, 2018

ஆரோக்கிய வாழ்விற்கு அவசியம் தேவை உடற்பயிற்சி.!!!

நாம் உயிர் வாழ உணவு எந்த அளவுக்கு முக்கியமோ அதுபோல நமது உடல் உறுதியுடனும்,வலிமையுடனும், ஆரோக்கியத்துடனும் இருக்க உடற்பயிற்சி மிக அவசியமாக இருக்கிறது. நவீன இயந்திரங்களும் சாதனங்களும் கண்டுபிடிக்குமுன் மனிதன்  உடல் உழைப்பைத்தான் அதிகமாக ஈடுபடுத்திக் கொள்ளும்படி இருந்தது.

Monday, April 9, 2018

விஷ ஜந்துக்கள் ஜாக்கிரதை.! அதற்க்கு என்ன செய்யலாம்.!?

கோடை வெயில் அகோர முகம் கொண்டு கொளுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறமிருக்க மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்  விஷ ஜந்துக்களுக்கும் பயந்து வாழவேண்டி உள்ளது.

Wednesday, April 4, 2018

கலவரம்.!

நாளெல்லாம் பட்டினியாய்
நகரெல்லாம் தீக்கிரையாய்
பாவிகளின் வன்செயலால்
பாரெல்லாம் கலவரமாய்

Thursday, March 29, 2018

மனித நேயத்தில் மருத்துவர்களின் பங்கு.!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒரு பழமொழி நம் முன்னோர்கள் சொல்வார்கள்.ஒரு மனிதன் எவ்வளவுதான் பணம் பொருள் செல்வம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சீக்கு பிணி இல்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்.

Saturday, March 17, 2018

சொந்த பந்தம்.

சொந்தபந்தம் என்பது இறைவன் இவ்வுலக வாழ்வில் நமக்கு வழங்கிய பெரும்பாக்கியமாகும். மனித வாழ்வில் மிக அவசியமான நம்முடன் பின்னிப் பிணைந்து சங்கிலித் தொடராய் வந்து கொண்டிருக்கும் உறவாகும்.நம் பிறவி தந்தை என்ற உறவின் மூலமாக தாய் என்ற உறவை தாங்கிப் பிடித்துக் கொண்டுதான் இவ்வுலகை கண்டோம். மனிதர்கள் இவ்வுலகில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து தனது வாழ்வு முடியும் வரை ஏதாவது ஒருவகை சொந்த  பந்தங்களை சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். அதுவே உலக நியதி.

Monday, March 5, 2018

யார் ஏழை .!?

ஓலைக் குடிசையாயினும்
உனதென்று சொந்தமாய்
ஒருவேளைக் கஞ்சி குடித்து
நிம்மதிப் பெருமூச்சில் 
நெஞ்சு நிமிர்த்தி நடக்கும்
நீயா ஏழை

Saturday, March 3, 2018

புரையோடிக்கொண்டிருக்கும் பாலியல் கேவலங்கள்.!

ஒருபுறம் கல்வியறியும் நாகரீகமும் நவீனமும் முன்னேறி பெருகிக்கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இன்னொருபுறம்  பெண்கள் சிறுமியர்கள் மீதான பலாத்காரமும் பாலியல் கேவலமும் பெருகிக்கொண்டு போவதுதான் பரிதாப நிலையாக உள்ளது. அதிலும் சில சம்பவங்கள் நாம் கேள்விப்படும் போது ஜீராணிக்கவே முடியவில்லை. மனசாட்சியே இல்லாமல் சிறுமியென்றும் பாராமல் கூட்டு பாலியல் பலாத்காரம்  கொஞ்சம்கூட ஐயப்பாடு இல்லாமல் கொடூரமான முறையில் நடப்பதை நினைத்தால் இம்மனித நாகரீகம்  பல வருடத்திற்கு பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.