Thursday, March 29, 2018

மனித நேயத்தில் மருத்துவர்களின் பங்கு.!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்று ஒரு பழமொழி நம் முன்னோர்கள் சொல்வார்கள்.ஒரு மனிதன் எவ்வளவுதான் பணம் பொருள் செல்வம் வசதி வாய்ப்பைப் பெற்றிருந்தாலும் சீக்கு பிணி இல்லாத வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும்.
ஆனால் நாம் எவ்வளவுதான் பேணிப்பாக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் நமக்கு சிறிய அளவிலாவது சீக்குப்பிணிகள் ஏற்படுவதுண்டு. அப்போது நாம் பெரிதும் நம்புவதும், நாடுவதும் மருத்துவரைத்தான்.  மனித வாழ்வில் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் பங்கு என்பது மிக முக்கியமான ஒரு மனிதநேய பணியாகும். மருத்துவம் என்பது மக்களுக்கு செய்யும் மகத்தான சேவையாகும்.அச்சேவைப் பணியில் அங்கம் வகிப்பவர்களே மருத்துவர் ஆவார்கள். ஒரு நோயாளி கடவுளுக்கு அடுத்தபடியாக நம்பிக்கை வைத்து இருப்பது தனக்கு வைத்தியம் செய்யும் மருத்துவராகத்தான் இருக்கும்.

அப்படிப்பட்ட பொறுப்புள்ள நம்பிக்கையுள்ள மிகச்சிறந்த மருத்துவப் பணியை மனசாட்ச்சியுடன் நேர்மையுடன் நடந்து பல உயிர்களைக் காப்பாற்றுவது ஒவ்வொரு மருத்துவரின்  கட்டாயக்கடமையாக உள்ளது.இதற்க்கு விதிவிலக்காக ஒருசில மருத்துவர்களின் அலட்ச்சியப் போக்கால் உயிர்ப்பலி ஆவதும் உண்டு.அப்படியொரு சம்பவம் ஏற்படும்போது  ஒட்டுமொத்த மருத்துவர்களுக்கும் அவப்பெயர் உண்டாகி விடுகிறது.

மருத்துவப்பணியையும் ஒருவிதத்தில் இது ஒரு தியாகப் பணிக்கு ஒப்பானவை என்று கூடச் சொல்லலாம்.காரணம் எத்தனையோ பலவிதமான  நோயாளிகள் வந்து சிகிச்சை மேற்கொள்வார்கள்.. அவர்கள் அனைவருக்கும் மனம் நோகாமல் பேசி அவர்களுடைய பிரச்சனை என்ன என்பதை பொறுமையுடன் கேட்டறிந்து அதற்க்கு தகுந்த சிகிச்சை அளிப்பது என்பது மருத்துவரின் கடமையாகிறது. அப்படி சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கும்போது சிலசமயம் அவசர சிகிச்சைக்காக கவலைக்கிடமாக நோயாளியை அழைத்து வந்திருப்பார்கள். மருத்துவரின் சூழ்நிலை அறியாது அந்த உறவினரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவசரப்பட்டு மருத்துவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள்.அந்த மாதிரி சூழ்நிலையில் மருத்துவர்கள் பொறுப்புடன் பொறுமையாகச் சொல்லும் ஆறுதல் வார்த்தைகளே அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாக உள்ளது. அப்படி அவர்களுக்கு ஆறுதல் சொல்வதுடன் அந்த நோயாளிக்கு அவசர சிகிச்சை அளிக்க வேண்டும் இப்படி இக்கட்டான சூழ்நிலைகளும் மருத்துவர்களுக்கு வருவதுண்டு.இந்த மாதிரி சூழ்நிலையில் பொறுமையை கையாள்வதுடன் போதிய சிகிச்சையளிக்க வேண்டும்.அப்படியானால் இதுஒருவகை  தியாகத்திற்கு நிகரானவையே என்றுதான் சொல்ல முடியும்.

இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் மருத்துவப் பணியென்பது மற்ற மனிதநேய பணியைவிட ஒருபடி மேலோங்கி இதுஒருவகை  தியாகத்திற்கு சமமானவையாகவே இருக்கிறது.

அப்படி நம்பிக்கை வைத்திருக்கும் மருத்துவப் பணி இன்று வியாபார நோக்கோடு கையாள்வது மிக வேதனைதரக் கூடிய விசயமாக இருக்கிறது. உடல்நிலை பாதிப்பு சீக்குப்பிணி நோய்கள் ஏழை பணக்காரர்கள் என்று பாகுபாடு பார்த்து வருவதில்லை. ஆனால் நோய்வந்தவர்கள் எல்லா மருத்துவமனைக்கும் சென்று வைத்தியம் பார்த்துவிட முடிவதில்லை. காரணம் மருத்துவமனையை பொறுத்து கட்டணங்களும் இதர செலவுகளும் மாறுபடுகிறது. இப்படி மருத்துவம் தொழிலாக மட்டும் பார்க்கப்படுவதால் வசதியற்ற ஏழை எளியோர்க்கு எட்டாக் கனியாகி  சரியான வைத்தியம் கிடைக்காமல் மரணத்தை தழுவுகிறார்கள்.

அதுமட்டுமல்ல அதைவிட பரிதாபம் குறிப்பிட்ட மருத்துவமனையின் பெயரைச் சொல்லி நான் இந்த மருத்துவமனையில் வைத்தியம் பார்க்கிறேன் என்று பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படி மக்கள் மனதை ஒரு மோகத்தில் ஆக்கி பெரும்பணத்தை கட்டாய கட்டணமாக வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படிப் பார்த்தாலும் எவ்வளவுதான் குறைகள் இருந்தாலும் மனித நேயப் பணிகளில் மருத்துவர்களின் பங்கு அளவிட்டுக் கூற முடியாத அளவில் உள்ளது. அதை மனதில் கொண்டு அப்புனிதமான மருத்துவப் பணியை தொழிலாக மட்டும் பார்க்காமல் அதனால் ஏற்படும் இன்னல்களையும் சிரமங்களையும் இன்முகத்துடன் ஏற்ப்பதுடன் காலநேரங்களையும் கணக்கில் கொள்ளாமல் சேவையாகவும் தியாக உணர்வோடும் மேற்கொண்டு சிறப்புறச் செய்து பல உயிர்களை நோய்களிலிருந்து மீட்டெடுத்து மனித நேயமிக்க நல் மருத்துவராக இவ்வுலக மக்கள்  ஒவ்வொருவரின் மனதில் வாழும்படி உயர்ந்த நிலையிலிருந்து  தானும் மகிழ்ந்து தனை நம்பும் மக்களையும் மகிழ்விப்பது ஒவ்வொரு மருத்துவர்களுக்கும் கடமையாகவும் பெரும்பங்காகவும் இருக்கிறது.

                                                              அதிரை மெய்சா 
                               

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.