Saturday, July 7, 2018

மனிதன் மாறிவிட்டான்.!?

காலங்கள் கடந்து செல்லச்செல்ல மனிதனின் மனம் கொஞ்சம்கொஞ்சமாக தனது வழியிலிருந்து மாறத்தொடங்கி விட்டது. மனிதன் மாறி விட்டான்.
சொல்,செயல்,நடவடிக்கை,நாகரீகம்,பழக்க வழக்கமென அனைத்திலும் மாற்றம் ஏற்பட்டு விட்டது. சுயநலம் பெருத்துவிட்டது. அநீதியின் கை ஓங்கிவிட்டது.ஆங்காங்கே கலவரம்,கொலை,கொள்ளை, கற்பழிப்பு போன்ற குற்றச்செயல் கணக்கில்லாமல் அரங்கேறி வருகிறது.

மனிதன் மாறியதற்கான சான்று இது ஒருபுறமிருக்க .......அடுத்து பார்ப்போமேயானால் ......  

இயற்க்கை அழிந்து கொண்டிருக்கிறது.பெருநோய்கள் சர்வசாதாரணமாக வரத்தொடங்கி விட்டது.மனிதனின் ஆயுட்காலம் குறைந்து கொண்டிருக்கிறது.பூமியில் நீர்ச்சத்து இல்லாமல் போய்விட்டது. உணவில் தரம் குறைந்து விட்டது.விவசாய பூமியெல்லாம் வீடுவாசலும் பலஅடுக்குக் கட்டிடமுமாகி விட்டது.காற்றும் கூட மாசுபட்டு விட்டது.சுற்றுச் சூழல் பாழாகிவிட்டது. உண்பவையிலிருந்து உடுத்தும்பொருள்வரை கலப்படமாகி விட்டது. அறிவூட்டும் கல்வியும் உயிர்காக்கும் மருத்துவமும் வியாபாரமாகி விட்டது.ஊழல் பெருத்து விட்டது.மனித உயிர்கள் மலிவாகிவிட்டது.

இதெற்க்கெல்லாம் காரணம் யார் .??? மனிதன் ...
மனிதனது சுயநலப்போக்கு ...அப்படியானால் மனிதன் மாறிவிட்டான்.
அழிவை நெருங்கிவிட்டான் என்றுதான் சொல்லமுடியும்.

ஒன்றைமட்டும் இம்மனிதன் நன்கு உணர்ந்து விட்டால் அனைத்திற்கும் தீர்வு கண்டு விடலாம்.அதாவது.... 

இந்த உலகம் இந்த வாழ்க்கை யாருக்கும் நிலையானது அல்ல.ஒவ்வொரு நொடிப்பொழுதும் மரணத்தை எதிர்நோக்கித்தான் இவ்வுலகில் நாம் வாழ்ந்து வருகிறோம். மரணம் ஒருநாள் நம்மை வந்து அடைந்தே தீரும்.அதில் எந்த மாற்றுக கருத்தும் இல்லை.அதை யாராலும் தடுக்க முடியாது.

நம்மிடத்தில் எத்தனை கோடி செல்வம் இருந்தாலும் எத்தனைதான் பாதுகாப்பு இருந்தாலும் யாராலும் மரணத்திலிருந்து நம்மை மீட்டுவிட முடியாது. மரணித்தபின் இவ்வுலகிலிருந்து நாம் சேமித்த எதையும் எடுத்துச் செல்ல முடியாது.நம்மோடு சேர்ந்து நம் சொந்தபந்தம் யாரும் வரப்போவதில்லை.

அதற்குமுன் இவ்வுலக வாழ்க்கையில் நமக்கான இறுதிநாள் வருமுன்  நாலு பேருக்கு நன்மை செய்து மரணத்திற்குப் பிறகும் நாம் ஒவ்வொருவரின் மனதில் வாழ்பவராக நல்லது செய்து புண்ணியத்தை தேடிக்கொள்ள வேண்டும்.

இப்படியான எண்ணங்கள் நம் ஒவ்வொருவரின் மனதிற்குள் வந்துவிட்டால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். இவ்வுலகம் அமைதி பெரும்.
                                                                அதிரை மெய்சா
                                                                  

2 comments:

  1. Masha Allah superb your Article lines

    ReplyDelete
  2. அழகிய வைர வரிகள். வாழ்த்துக்கள்.
    பஷீர் அகமது

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.