Friday, May 4, 2018

கவிதையே தெரியுமா ?

கவிதைக்குள் மெல்லிய
ஓசையெனும் உயிர்
வேண்டும்


உள்ளும் புறமும்
அர்த்தங்கள் பல்லாயிரம்
புதைந்திருக்க
வேண்டும்

கற்பனை யானாலும்
சொற்க்களை
வாசிப்போர்க்கு
நேசிப்பு வர
வேண்டும்

கவிதைச்சொல்
பூச்சுக்களில்லா
புரிந்திடும் சொல்கொண்டு
புனைத்து
செவி திறந்து
மெய்மறக்கச்
செய்திட வேண்டும்

எக்கரு கொண்டு
தொடங்கினும்
அக்கருவின் அடையாளம்
முன்னுரையிலும்
முடிவுரையிலும்
முகம் காட்ட வேண்டும்

சாந்தம் சங்கமமாகி
மௌனத்திற்க்கு
முற்றுப்புள்ளி வைத்து
ஆதிக்கம் இல்லா
அகந்தை கொள்ளா
சுதந்திர படிமங்களை
கொண்டிருக்க வேண்டும்

புழக்கமில்லாச் சொற்க்களை
புதுமைக்காக
புகுத்தினாலும்
அகராதியும்
அறந்தமிழுமே
ஆதிக்கம் செலுத்திட
வேண்டும்

முடிவில் கவிதை
காட்சிக்கு வரும்போது
மூன்றானாலும்
முப்பது கோடி முறையானாலும்
வாசிப்பில் தெகிட்டா
முக்கனிச் சுவை வேண்டும்

                                                           
                                                              அதிரை மெய்சா


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.