Wednesday, May 23, 2018

நோன்புக் கஞ்சி.

நோன்பு மாதம் ஆரம்பம்
நோன்புக் கஞ்சி தாராளம்


எங்கும் மணத்திடும்
நோன்புக் கஞ்சி
எல்லோர்க்கும் உகந்திடும்
உணவுக் கஞ்சி

ஏழையும் செல்வந்தரும்
விரும்பும் கஞ்சி
ஏற்றமான நல்லுணவு
இக்கஞ்சி

உடலுக்கும் குடலுக்கும்
ஏற்ற கஞ்சி
ஒப்பில்லா குணம் கொண்ட
நற்க்கஞ்சி

மருத்துவமும் பரிந்துரைக்கும்
இக் கஞ்சி
மகத்துவம் மிக்கது
இந் நோன்புக் கஞ்சி

அகிலமெங்கும் இம்மாதம்
கிடைக்கும் கஞ்சி
அனைவருமே ருசித்து புசிக்கும்
அருமைக் கஞ்சி  


வயிறை நிறைத்து வலிமை தந்திடும்
மனதை நிறைத்து மகிழ்வைக் கொடுத்திடும்

நோவினை நீக்கி நாவினில் நின்றிடும்
நோவாமல் உள்சென்று நோன்புப்பசி போக்கிடும்  

இக் கஞ்சியின் மகிமை அறிந்தோர்
காலமெல்லாம் நோன்பு நோட்பர் 
இறைவனுக்கு நன்றி சொல்லி
ஈடில்லா அருள் பெறுவர் 

                                                               அதிரை மெய்சா
                                              

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.