ஒன்று வாங்கினால்
ஒன்று இலவசம்
அறியாதவன் கண்ணுக்கு
ஆனந்தம் பெருமிதம்
இலவசப் போர்வையில்
இயங்குது தொழில்துறை
பரவசப் பார்வையில்
பாமரர் மனநிலை
பகட்டு விளம்பரத்தில்
பெருத்த விற்பனை
கொடுத்த பணத்திற்கு
பொருட்களோ பாதிப் பை
தரத்தை சோதிக்க
இலவசம் கண்மறைக்க
தரமில்லா வியாபாரம்
தரணியெங்கும் பெருகியதோ
உள்ளூர் கடைகள்
உறங்கி கிடக்க
ஊர்தாண்டிச் சென்று நாம்
பணத்தை இரைக்க
போலிகளின் படையெடுப்பு
போர்க்குவியலாய் ஆகியதே
இவையனைத்தும் இலவசத்தால்
இன்னும் விற்பனை ஆகிறதே
இலவசம் என்றதாலே
அதன் வசம் ஆகினரே
அவசியமற்றதை
அள்ளிக் குமித்து
கடன்காரர் ஆகினரே
எல்லாமே மோகம்தான்
வியாபார நோக்கம்தான்
இலவசமாய் யார் தருவார்
எம்மக்கள் என்றுணர்வர்
அதிரை மெய்சா
அருமை
ReplyDeleteAssalamu alaikum wa rahmathullahi wa barakathuhu, awesome your poet lines ������❤️❤️❤️
ReplyDeleteஅருமை..👌
ReplyDelete