Monday, April 9, 2018

விஷ ஜந்துக்கள் ஜாக்கிரதை.! அதற்க்கு என்ன செய்யலாம்.!?

கோடை வெயில் அகோர முகம் கொண்டு கொளுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சம் ஒருபுறமிருக்க மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்  விஷ ஜந்துக்களுக்கும் பயந்து வாழவேண்டி உள்ளது.
நமது வசிப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காடு முற்புதர்களில் வசிக்கும்  பாம்பு, பூரான், தேள்,நட்டுவாக்களி,விஷ வண்டு,காட்டு மரவட்டை,சிலந்தி போன்ற விஷ ஜந்துக்கள் இடமாற்றம் வேண்டி மக்கள் வசிக்கும் வசிப்பிடத்திற்குள் ஊடுருவி வர அதிக வாய்ப்பு உள்ளது. காரணம் வெயிலின் தாக்கத்தாலும், தண்ணீர் தட்டுப்பாட்டால் ஈரத்தன்மை அற்று பூமி வறண்டு போவதாலும் இத்தகைய தட்பவெட்ப சூழ்நிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டி காடுகளிலும் கழிவு நீர்களிலும் வாழும் விஷ ஜந்துக்கள் இடம் பெயர்கிறது. இந்த சமயத்தில் விஷ ஜந்துக்கள் தீண்டும்போது விஷத்தன்மை அதிக சக்தி கொண்டதாக இருக்கிறது. இதனால் விஷ ஜந்துக்கள் தீண்டியவர்களுக்கு சில சமயம் துரதிஷ்டாவசமாக அகால மரணமும் ஏற்ப்படுவதுண்டு. 

இத்தருணத்தில் நாம் மிக கவனமுடனும் முன்னெச்செரிக்கையுடனும்  நடந்துகொள்வது அவசியமாக இருக்கிறது. நமது வசிப்பிடங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் சமையலுக்காக சுத்தம் செய்யும் சைவ, அசைவக் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அந்த இடத்தை துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வீட்டில் தேவையில்லாத பொருட்களை வீசியெறியாமல் அதை குப்பைபோல் ஒருமூளையில் சேகரித்து வைப்பது, அட்டைப்பெட்டி மற்றும் கூடைகளில் சேமித்து வைப்பது போன்ற அலட்சியப் போக்கை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இப்படி குப்பை கூலங்கள் நீண்டநாள் சேமித்து வைப்பதால் விஷஜந்துக்கள் அதில் தஞ்சமடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அதை அகற்றும் போதோ அல்லது அதிலிருந்து ஏதாவது பொருளை கைகளால் எடுக்கும்போதோ எச்சரிக்கையுடன் கவனித்து பார்ப்பது நல்லது.

அடுத்தபடியாக வீட்டில் குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருட்களை சேகரித்து வைக்கும் பெட்டி,புத்தகப்பை காலனி ஆகியவற்றை நன்கு சோதித்து அதன்பிறகு குழந்தைகளுக்கு கொடுப்பது பாதுகாப்பாக இருக்கும். இதன் உள் பகுதியிலும் விஷஜந்துக்கள் ஊடுருவி இருந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

மற்றும் துணிகளைத்துவைத்து கழுகியபின் கொடிகளில் உலரவைத்து எடுக்கும்போது நன்கு உதறியப்பார்த்த பின்பு வீட்டிற்குள் கொண்டுவருவது நல்லது.ஏனெனில் தேள்,பூரான்,சிலந்தி மற்றும் சில விஷப் பூச்சிகள் துணிகளோடு சேர்ந்து ஒட்டிக் கொண்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

இப்படி பலவகையிலும் நமது  வசிப்பிடங்களை சுத்தமாகவும் கவனமாகவும் வைத்துக் கொண்டோமேயானால்  விபரீத நிகழ்வு ஏதும் ஏற்படுமுன் இந்த விஷ ஜந்துக்களிடமிருந்து நாமும் நமது குழந்தைகளையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

                                                               அதிரை மெய்சா
                                           

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.