Wednesday, September 25, 2013

நாணயமும் 'நா' நயமும்


நம்பிக்கையின் பிறப்பிடமாம் நா நயம்
நம் வாழ்கைக்கு அவசியம் நாணயம்

ஆசைக்கு அஸ்திவாரம் நாணயம்
அன்பிற்கும் உதவிடுமாம் நா நயம்

சில்லறையின் மறு பெயராம் நாணயம்
கல்லறையிலும் நிம்மதி தரும் நா நயம்

வையகத்தில் வாழவைப்பது நாணயம்
வானுயர புகழ் சேர்ப்பது நா நயம்

சோதனையாய் இருப்பதுவே நாணயம்
சாதனை பல படைக்குமிந்த நா நயம்

உறவுக்குக் கைகொடுக்கும் நாணயம்
உணர்வுக்கு உயிர் கொடுக்கும் நா நயம்

யாதோர்க்கும் வழிகாட்டும் நாணயம்
போவோர்க்கும் புண்ணியம் சேர்க்கும் நா நயம்

விலைவாசி நிர்ணயிக்குமிந்த நாணயம்
தலைமூழ்கா விலை வைப்பது நா நயம்

நிலைமாறித் தடுமாறுமிந்த நாணயம்
நிலைதவறா மனிதனிடமிருப்பதோ நா நயம்

வேதனையில் வீழ்ந்த இந்த நாணயம்
வீழ்ச்சிக்குக் காரணமாம் நா நயம்

நா நயம் இல்லாதவனின் நாணயம்
நல்லோர்க்கு பயன்படாத நாணயம்

நா நயம் காத்திடல் சாதனையாகுமே
நலிந்தோர்கள் உயர்ந்திட நாணயம் உதவுமே

ஏனைய நாட்டு நாணயத்தை
எம் நாட்டு நாணயம் மிஞ்சிடவே
நா நயமான மனிதர்களாய்
நலிந்திருக்கும் பணவீக்கம் சீராக்கி
நம் நாட்டு நாணயமதிப்பை உயர்த்திடுவோம்


அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 12-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.