மண்ணுலகின் மாயவாழ்வில்
மடிதனில் நீ தவழும்போதேவிண்ணுயர வளர்ந்திட்டு
வீறுகொண்டு நின்றிடவே
உள்மனதில் உன்மீது
உறக்கமில்லா கனவுகளில்
கறக்கத்துடன் காத்திருக்கும்
தாயவளின் எதிர்பார்ப்பு
பஞ்சம் பசி போக்க்கிடத்தான்
பாரினிலே வாழ்ந்திடத்தான்
நெஞ்சம் உருகி கேட்டிடும்
நிர்க்கதியான மனிதர்கள்
தஞ்சம் என்று தரணியிலே
தவமாய் கிடந்தும் பாராமல்
கொஞ்சம் ஈரம் படைத்தவர்கள்
கொடுத்துதவும் கரங்களாய்
தர்மம் ஒரு எதிர்பார்ப்பு
கண்ணுக்கு இமையாக
கருமேகத்து மழையாக
மின்னிவரும் ஒளியாக
மிளிர்ந்திருக்கும் உடையாக
கொடியிடையில் நடையாக
கோடிப்பூக்கள் உடலாக
சொல்லில் அடங்கா வரியாக
சுகமான நினைவாக
காதல் ஒரு எதிர்பார்ப்பு
ஆசானின் ஆசைகளோ
அன்பான மாணாக்கள்
அகம் மகிழ தேர்வாகி
அவன் வாழ்வு சிறந்திட்டு
அகிலத்தில் திழைத்திட்டு
அன்புடனே ஆதரிக்கும்
அடியேனை மறவாது
அனுதினமும் நினைவுகூற
அன்னவரின் எதிர்பார்ப்பு
வாக்குகள்பெற வாக்குறுதிபல
வழங்கிட்ட தலைவர்கள்
நாக்குறுதி இல்லாமல்
நழுவிச்செல்லும் செயல் கண்டு
நாட்டுமக்கள் நலம் பயக்க
நல்லவர்கள் ஆட்சி செய்ய
நா வறண்டு நடுப்பகலில்
நடத்திட்ட போராட்டம்
மக்களின் ஒரு எதிர்பார்ப்பு
எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்த நிலைகண்டு
துகில்பாடி வளம் வந்து
தொடரான அவலம் கண்டு
மதியதனை மனம் வென்று
மகிழ்வதனை பகிர்ந்திட்டு
சிறப்புடனே சீராட்டி
செழிப்புடனே வாழ்ந்திருக்க
அனைத்து ஆன்மாக்களின் எதிர்பாப்பு
ஆக்கம் அதிரை மெய்சா

No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.