Wednesday, January 22, 2014

தவம்


விரதங்கள் பல இருந்து
விடியலை எதிர்நோக்கி
மனதினை ஒருநிலைப்படுத்தி
மாமாங்கம் காத்திருந்து
மதிமறந்து இருப்பதும்
ஒரு வகைத்தவம்


புண்ணியமெனும் சொல்லுக்குப்
புனைப்பெயராய் இருந்து
கண்ணியம் காத்துக்
காரிருள் நீக்கி
எண்ணிய எண்ணம்
ஈடேறி ஏக்கமாய்
பெறப்படுவதுமொரு தவம்

கன்னியரின் கனவுகள்
கரைபடியா க்கத்தியாய்
தனக்குகந்த தணையனை
தாரமாய் க்கொள்வதும்
தாம் செய்த
தவத்திலும்
மிகப்பெரிய தவம்

மடைப்பினம் இல்லா
படைப்பினம் பெற்று
மதியினைக் கூறாய்
ஆறாய் அடைந்து
மகத்துவம் நிறைந்த
மா மனிதனாய்
மகுடம் சூடி
வலம் வருவதும்
வனப்பானதொரு
சிறந்த தவம்

கொடுப்பினையெனும் சொல்லுக்கு
கூடுதல் மெருகேற்றக்
கூடிப்பேசுவோர் வாயை
பாடிப்புகழ வைத்து
குலம் செழிக்க
குழந்தை பாக்கியம் பெறுவதும்
தாம் செய்த தவத்திலும்
மாபெரும் தவம்

அத்தனை சுகமும்
மொத்தமாப் பெற்று
அகிலமே போற்றும்
ஆதிக்க நாயகனாய்
சாதித்து ஆழ்வதும்
அவரவர் செய்த தவத்தில்
ஆனந்தமடையும்
பேரின்ப தவமாம்

தவத்தினில் நற்த்தவமாய்
தாயன்பைப் பெறுவோரும்
தன்மானம் காப்போரும்
ஈடில்லா நலனெய்து
ஈருலகை வெல்வோரும்
இணையில்லா நற்த்தவமாம்
இதிகாசம் படைத்திடத்தான்
அதிரை மெய்சா
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 18-07-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...



தவம் கவிதை youtube -ல் 5.40 நிமிடத்தில் கேட்கலாம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.