Sunday, December 1, 2013

பெண்ணிவள் !


பெண்மைக்குப் புகழ் சேர்த்து
மானுடத்திற்கு வித்திட்டு
எண்ணிலடங்கா உறவுகளை
தன்கருவில் கொண்டுவந்து
இவ்வையகமே வியந்து போற்றும்
படைப்பினமே பெண்ணிவள்

பன்முகக் கதாநாயகியாய்
இப்பாரினில் வளம் வந்து
இன்முகத்தில் எந்நாளும்
இன்புறச் செய்பவள்
பெண்ணிவள்

பூவிலும் மென்மையாய்
பூந்தளிர் கொடிநடையாய்
துறவியும் மயங்கிடும்
பிறவியின் அதிசயம்
கருவிழிக் கண்களும்
காந்தம் போல் பார்வையும்
இவ்விரு பொருளன்றோ
இப்பெண்மையின் ரகசியம்

கண்ணியம் காத்திடும்
காலமும் போற்றிடும்
என்னிலை மாறினும்
பெண்ணிலை மாறாது
வாரிசைப் பெருக்கியே
மேன்மையை அடையுவாள்

மென்மையில் பூவாக
தன்மையில் மிதமாக
பன்மையின் சுவையாக
பாருலகின் பேரழகியாக
உண்மையின் உருவாக
உயரிய நற்ப் படைப்பாக
குடும்பத்தின் தலைவியாக
குடில் செழிக்க குத்துவிளக்காக
போற்றப் படுபவள்
பெண்ணிவள்

பெண்மையின் தன்மையை
உண்மையில் காணலாம்
அண்மையில் படித்திட்ட
ஆதி வரலாற்றுப் பாடத்தில்

பெண்ணியம் காத்திட்டு
பேணுதல் உத்தமம்
பெண்மையை போற்றுதல்
பேராண்மையின் நற்குணம்
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 07-11-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.