Sunday, November 24, 2013

நாங்களும் காமெடி பண்ணுவோம்ல!? [ நகைச்சுவை விருந்து ]


காமெடி செய்து அடுத்தவர்களை சிரிக்கவைத்து மகிழ்வதாலும், தானும் எப்போதும் சிரிப்புடன் புன்னகை முகத்துடன் இருப்பதாலும் உடல் ரீதியிலும் மன ரீதியிலும் நமக்கு பல நன்மைகள் உண்டு என்பதற்காக எழுதப்பட்ட விழிப்புணர்வு கட்டுரை தான் இது. படித்துவிட்டு சிரிப்பு ஒன்னும் வரலியேன்னு சொல்லி தயவு செய்து காமெடி கீமெடி பண்ணிடாதீங்கோ..சார் [காமெடி சரி.அது என்ன கீமெடி.!?!?] [ஆரம்பிச்சிட்டியா.! ]

காமெடி என்பது அது ஒரு தனிக் கலையென்று தான் சொல்லவேண்டும். [பரதநாட்டியம், குச்சிப்புடி,கதகளி இந்த மாதிரியா.? ஹி...ஹி..ஹீ..] [ஒன்னே...என்ன பன்றேண்டுபார்.. ]அதை எல்லோராலும் செய்துவிட முடியாது என்று சொன்னால் மிகையில்லை. [ மெய்யாலுந்தானுங்கோ எல்லோராலும் செய்துவிட முடியாதூங்கோ நா காமெடி கீமெடி ஏதும் பண்ணலேங்கோ ] [அது எங்களுக்கு தெரியூங்கோ அந்த நாரவாயே கொஞ்சம் மூடிக்கிட்டு ஒரு மூலையிலே போய் உக்காருங்கோ] நகைச்சுவை உணர்வு என்பது இயற்கையாகவே ஒருசிலருக்கு அமையப்பெற்றிருக்கும் பாக்கியமாகும்.[அப்போ எங்களுக்கெல்லாம் அந்த பாக்கியம்இல்லேன்றீங்களா.?!? ] [யார்ப்பா அங்கெ பாக்கியம் பாக்கியமுண்டு எம்பேர சொல்லி கூப்பிடுறது..?!?] [நீங்க போங்கம்மா உங்கள கூப்பிடல..ஏது இவனாலே வம்பெ வெலையில்லாமெ சும்மாவே வாங்குற மாதிரி வரும்போல இருக்கே.!இன்னு என்னத்துல கொண்டுபோய் மாட்டி விடப்போரான்டு தெரியலையே ]

சிலரது முகபாவனையே அடக்க முடியாத சிரிப்பை வரவழைத்து விடும்.[ப்...ப்ப் ...பூ.... ஹி...ஹி..ஹிஹிஹ்ஹி] [ச்சீ..ச்சீ.. இது சிரிப்பா..அப்பொ சிரிப்பையெல்லா எப்படி சொல்லுவீகலாம் ] சிலர் பேச ஆரம்பித்தால் முடிவுவரை நகைச்சுவையுடன் பேசி நமது வயிறை வலிவரும்படி செய்து விடுவார்கள்.[இஹ்... இஹ... அஹ்...அஹ்...ஆஹ்ஹ்][சரி --சரி.. போதும் இருமி..இருமி..எடத்த நாரடிச்சிடாதே.!இப்படி பொழுதன்னக்கிம் சிகிரெட்ட குடிச்சா இருமதான் வரும் சிரிப்பு எங்கேருந்து வரும்.!? ]

காமெடி என்பதை வெறும் சிரிப்பாக மட்டும் பார்க்கக் கூடாது. பல நோய் தீர்க்கும் நிவாரணியாகவும் இருக்கிறது. [அப்படீன்னா தலவலி கிலவலி வந்தா அமிர்தாஞ்சன், விக்ஸ் ஏதும் போட தேவையில்லையா.!? ] [ம்ம்..பெரிய காமெடியன்கிற நெனப்பு !?]அதனால் தான் வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்று முன்னோர்கள் சொல்வார்கள். [அப்போ பெருசுங்க சொன்னதையெல்லா கேட்டு நடக்கணுமா.? ] [இந்த லொள்ளு தானே வேணான்றது.!] துன்பம் வரும் வேளையில் கூட சிரிக்கச்சொல்லியிருக்கிறார்கள் பெரியவர்கள். [அதற்காக துக்கம் அனுசரிக்கும் இடத்திற்க்கெல்லாம் போய் வாய் கிழிய சிரித்து விட்டு செமெ மாத்து வாங்கிகிட்டு வரச் சொல்றீங்களா.!?] [கொஞ்சம் அடக்கிகிட்டு இரியேன்டா.! ஏன்டா இப்புடி... ? வேணா விட்டுட்டு அழுதுடுவேன்..ஆஆஆ உன் இம்ச தாங்க முடியலடா ] சிரிப்புடன் வாழ்க்கையை போக்குபவர்களுக்கு ஆயுள் அதிகம் என்பதாக கூட சொல்லக் கேட்டிருப்போம். [அப்பொ சோறு ஏதும் திங்காமெ சிரிச்சிக்கிட்டே இருந்தா போதுமா.?நா உசுரோட இருக்கிறது உங்களுக்கு புடிக்கலையா.? ] [ஒஹ்.. சூப்பர் காமெடில ஹி...ஹி..ஹி...அடச்சீ..]

மன அழுத்தம், தாங்கிக் கொள்ள முடியாத கவலை, குடும்பப் பிரச்சனைகளால் மன நிம்மதியின்மை... [இரி..இரி.. இதுக்குத்தான் இப்போ டாக்டர்ங்க டி.விலே வந்து வைத்தியம் பண்றாங்களே.! ஒஹ்.. சாரி..வைத்தியத்துக்கு விளக்கம் சொல்றாங்களே.!][ஏய்..இதெல்லா டூமச்சி...என் வாயெக் கெலப்பாதே..ரெண்டு நாளக்கி முன்னாடி தான் இப்புடி நக்கலா பேசி மூஞ்ச காண சகிக்கமுடியாத அளவுக்கு எண்ணையில போட்டெடுத்த பணியாரம்போல வீங்கிப் போய் வந்தே.!?] இத்தகைய தருணத்தில் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நண்பர்களோ உறவினர்களோ ஏதாவது காமெடி செய்து அவர்களை சிரிக்க வைத்து சிந்தனையை திசை திருப்பினால் தற்காலிக நிவாரணியாக அந்த கவலையிலிருந்து மீழ்ந்து வர வாய்ப்பாக இருக்கும்.[அப்போ எங்களயெல்லா பைத்தியம்பிடிச்சி தெரு தெருவா அலைய சொல்றீங்களா.?ஏன்னா..இப்போஉள்ள பிரெண்டுமாருங்க நம்ம சிந்தனைய திச திருப்ப அப்படித்தான் கலாய்க்கிரானுங்க !இந்த மாதிரி ஹெல்ப்பெல்லாம் பொண்ணுங்களுக்குத்தான் செய்வானுங்க ] [என்னடா..ஒம்பிரண்டு பொல்லாத பிரண்டு நமக்கு ஒத்துவராதவனெயெல்லா ஏன்டா பிரண்டா வச்சிக்கிர்றீங்க !நல்லவனா பாத்து பழகுங்கலேன்டா ஏன்டா இப்படி உருப்படாதவனோடவல்லாம் பழகி பேர கெடுத்துக்கிறீங்க ]

துன்பத்தை மறந்து தன்னையும் அறியாது சிரித்திருக்கும் நிகழ்வு அனைவரது வாழ்க்கையிலும் ஒரு முறையேனும் எதேர்ச்சையாக நடந்திருக்கும்.நன்றாக சிரித்துsorry சிந்தித்துப் பாருங்கள். [அப்புடி ஒன்னும் நடந்த மாதிரி தெரியலயே..ம்ம்ம்.. எதுக்கும் நம்ம ஃபிகர் கிட்டே கேட்டுக்கிடுவோம் ] [மவனே ஒனக்கு நேரம் சரியில்லேன்டு நெனக்கிறேன் பொண்ணுங்கள கண்டு இந்த ஜொள்ளு உட்ரதையெல்லா நிறுத்திக்கோ இல்லே அடி உதைபட்டு அநியாயத்துக்கு செத்துப்போவே]

வாழ்க்கை வாழ்வதற்காகவே அன்றி இப்படி மூஞ்சை தூக்கிவைத்துக் கொண்டு விறப்பாக வீரவசனம் பேசமட்டுமல்ல.[இது யாருக்கோ சொல்றமாதிரி தெரியுதே..ம்ம்ம்..] [சும்மா இருக்கமாட்டியா நீயி. எரியிற நெருப்புல பெட்ரோல இல்ல..இல்ல..பெட்ரோல சொன்னாலெ வயிறு கடாமுடாங்குது [அவ்வளவு வெல ஏத்தம்] எண்ணையே தூக்கி ஊத்துனானாம்... ]

ஆக மொத்தத்தில் சிரித்த முகத்துடன் இருப்பவர்களும் பிறரை சிரிக்க வைத்துக் கொண்டிருப்பவர்களும் வாழ்க்கையில் எந்தப் பிரச்சனைகளையும் எதிர்கொண்டு தனது புன்னகைப் பூக்களால் மாலையிட்டு இன்முகம் காட்டி வென்று விடுவார்கள்.[சும்மா..சும்மா..சிரிச்சிக் கிட்டே இருந்தா அப்பறம் மெண்டல் ஹாஸ்ப்பெட்டல்லெ சேத்துடப்போறானுங்க ] [நல்ல மெஸ்ஸேஜ் சொல்றார்ல சும்மா போத்திக்கிட்டு இரு ]ஆகவே வாழ்க்கையில் அதிகமாக சிரிப்போம். வாழ்நாளை சிரமமில்லாமல் கழிப்போம். [அப்படீன்னா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்ண்டு ரொம்ப அடம்புடிக்கிறீங்க அதுக்கு என்னா..சிரிச்சிட்டா போச்சி... சிரிச்சிடுவோம்.. ஹி..ஹி..ஹிஹிஹி.. இஹ்ஹு.. இஹ்ஹு..ஆஆஹ்ஹ்ஹ்..அதுக்கு மேலே நம்மனாலே சிரிக்க முடியாதூங்கோ... நீங்களும் கொஞ்சம் சிரிங்கோ... வரட்டுமாங்கோ.!] [ இனிமே நீஇந்தபக்கமா வந்துடாதே அப்புடியே ஓடிப் போய்டு இல்லே இந்த சமூக விழிப்புணர்வு பக்கங்கள்லெ இருக்கிற பங்களிப்பாளர்களும் வாசகர்களும் சேர்ந்து ஒன்னே கும்மோ கும்முன்னு கும்மி எடுத்துடுவாங்க.... அப்பாட தொலஞ்சாம்ப்பா....ஸ்..ஸ்ஸ்ஸ்.... ]

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.