Sunday, October 13, 2013

வரி


ஆட்சியாளர் போடும் வரி
அடிவயிற்றைக் கலக்கும் வரி
மாய்ந்த பின்னும் மனம் வலிக்கும்
மனம் முழுதும் கனமிருக்கும்


வரிகளில் எத்தனை விதம்
வகை வகையாய் முளைத்ததுவே
நிறங்களையும் மிஞ்சிடுமாம்
நிம்மதியும் போனதுவே

அந்த வரி இந்த வரி
அதுக்கும் வரி எதுக்கும் வரி
அரசு பிறப்பித்த ஆணையிது

எந்த வரியானாலும்
எம்மக்கள் நசுங்கிப் போகும்

அடுக்கடுக்காய் ஆயிரம் வரிகள்
அடங்கிடாத விலைவாசி உயர்வு
மடங்கிப் படுத்தும் தூக்கமில்லை
மனதினிலே மகிழ்ச்சியில்லை

சொல்லிமாலா துயர்கொடுக்கும்
சல்லிக் காசும் சபித்து விடும்

ஆடம்பரப் பொருளுக்கு
அரசு விதித்த வரி சரியே

அத்தியாவசியப் பொருளுக்கும்
விதித்த வரி சரிதானோ

சொத்துவரி வருமானவரி
சொகுசாய் இலாபம் அடையும் வரி

சுங்கவரி தங்க வரி
சுகமாய் வருமானம்
கொடுக்கும் வரி

வீட்டுவரி ரோட்டுவரி
விழித்துக் கொள்ள செலுத்தும் வரியே
மாறுபட்டால் அபராதம்
மறுமுறை வேண்டாம் விபரீதம்

சொந்த நாட்டில் வரி செலுத்தல்
சாபம் தானோ மக்களுக்கு

எந்த நாட்டில் வரியில்லை
ஏனோ இங்கு கணக்கில்லை

நெறியுடனே வரி போடு
நீதி தவறா வரி செலுத்து

வரி செலுத்தி வாழ்வது பெருமை
வறியோர்க்கு இல்லையது கடமை

அரசே இதை நீ கவனத்திலேற்று
அடியேனது அன்பின் கூற்று

வரி ஏய்ப்புச் செய்திடல் ஆகா
வறியோரின் வயிற்றில் அடித்தல் கூடா
முறையாய் வரிப்பணம் செலுத்திடலே
முன்னேற்ற நாட்டின் அறிகுறியே

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 26-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
 
YOUTUBE-ல் எனது கவிதை வரி 14.10 நிமிடத்திலிருந்து ஆரம்பமாகும்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.