Friday, September 13, 2013

முரண்பாடு

அகமொன்றும் புறமொன்றும்
அநீதிக்கு வழி வகுக்கும்
ஆன்மாவின் சொல்லிதுவே
ஆங்காங்கே ஒலிக்கட்டும்


முரண்பட்ட வார்த்தைகளே
முர்ப்புதறாய் முளைத்து விட்டால்
கறை பட்டு குறை பட்டு
கண்ணீரில் துயர் நனையும்

முரண்பட்ட வாழ்க்கையிலே
முழு ப்பொழுதும் கழித்து விட்டால்
இளமையினை பாழ்படுத்தி
இன்னல்பலச் சுமப்பாய் நீ

மனிதனவன் முரண்பட்டால்
மதியுடனே போரிடுவான்
மனதிலே தெளிவு பெற்றால்
புனிதனாகி ப்புகழடைவான்

இயற்கைகள் முரண்பட்டால்
ஈடில்லா இழப்பெய்வோம்

இல்வாழ்வு முரண்பட்டால்
இன்பங்கள் இழந்து நிற்ப்போம்

சிந்தனைகள் முரண்பட்டால்
சீர்திருத்தம் சிதைந்து விடும்

சிலநொடியின் முரண் பாட்டால்
பல நினைவும் கனவாகும்

சொல்வாக்கு முரண்பட்டால்
செல்வாக்கு குறைந்து விடும்

வாழ்க்கைதனில் முரண்பட்டால்
வாலிபத்தை வஞ்சிப்பதாகும்

படைத்தவன் முரண்பட்டால்
இப்பாருலகே அழிந்து போகும்

மனிதனவன் முரண்படவே
பினியதனை பிடித்து நிற்பான்

மதியுடனே நீ நடந்தால்
விதி கூட முரண்படுமாம்

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 01-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இதோ அதன் காணொளி...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.