Friday, September 13, 2013

முறிவு

உறவுகளின் பலம் இழப்பே
முறிவுகளின் ஆரம்பமாம்

உணர்வுகள் ஒத்து நின்றால்
உள்ளமது தூய்மை பெரும்


ஆழமாக அன்பு கொண்டால்
அரக்கன் கூட அடிபணிவான்

அடிமை வாழ்வு நீங்கி விட்டால்
மனித வாழ்வு தழைத்து நிற்கும்

மனமுறிவில் பகை கொண்டால்
மனதினிலே நிம்மதி போகும்

முகமுறிவு வந்துவிட்டால்
அகம் முறிந்து அன்னியமாகும்

குணமதனை முறித்துக் கொண்டால்
கொள்கையிலே மாற்றம் கொள்வான்

கணப்பொழுது யோசித்தால்
காலமெல்லாம் நலம் பெறலாம்

சிலபேரின் முறிவுகளில்
சினம் நீங்கிப் பகை மறையும்

பலபேரின் முறிவுகளோ
பார் தூற்றப் பகையாகும்

அறிவுடனே செயல் பட்டால்
முறிவுகளும் முற்றுப்பெறும்

அகத்திரையை அகற்றிவிட்டால்
முகத்தினிலே புன்னகை பூக்கும்

பொல்லாத உறவுகளால்
நல் வாழ்வு முறிந்து விடும்

பொல்லாங்கு செய்பவரை
நல்லோர்கள் முறித்துக் கொள்வர்

இல்வாழ்வு முறிந்து விட்டால்
இன்பங்கள் தூர நிற்கும்

இதிகாசம் படைத்திடவே
இயன்றவரை கூடிவாழ்வோம்


அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 29-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.