இன்றைய கால இளைஞர்களின்
உல்லாச வாகனம் நான்
உங்களது வாழ்வினில்
பெரும்பங்கு எனக்கும் உண்டு
ஆனால் நீ என்மீது அமர்ந்த பின்னர்
என்னையே மறந்து போகின்றாய்
கைபேசி மணியொலி கேட்டு
என்னை கைவிட்டபடி ஓட்டுகின்றாய்
தோழன் உன் தோளில் கை வைத்ததும்
துறத்தி துறத்தி நீ செல்கின்றாய்
தயங்காது நீ பிறரை முந்திச்செல்கையில்
தயங்குகிறது எந்தன் இருசக்கரம்
ஒவ்வொரு முறை நீயும் என்னை
மயிரிலையில் தப்பவைக்கிறாய்
நீ எதிர்கொள்ளும் அனைத்து விபத்தும்
என்னையே சபியாய் சபிக்கின்றது
ஏன் இந்த சோதனை எனக்கு
எப்போதென்னை புரிந்து கொள்வாய்
கரடுமுரடு பாதையிலும்
கவிழாது நான் போவேன்
பகலானாலும் இரவானாலும்
பார்த்து பார்த்து நான் செல்வேன்
வெயிலானாலும் மழையானாலும்
வென்று வருவேன் உன் வேலைகளை
எரிபொருள் தீர்ந்த பின்னும்
எத்திவைப்பேன் நீ செல்லுமிடம் வரை
முறையாக நீ உபயோகித்தால்
முழுவிசுவாசியாக நானிருப்பேன்
அயராது உழைக்கும் என்னை
அரவணைத்து காப்பாயாக
ஆக்கம் அதிரை மெய்சா
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.