Saturday, September 21, 2013

அரசுப் பேரூந்தின் அழுகைச்சப்தம் !




 

அனைத்து மக்களுக்கும்.........
அன்றாடம் தேவைப்படும் ......
அத்தியாவசிய பேரூந்து நீ....!
அதிகாலைப்பொழுது முதல்.........
அந்திசாய்ந்தும் அயராது..........
அறும்பணிகள் ஆற்றிடுவாய் நீ....!


வள்ளுவர் குறள் பதித்து..........
வணங்கிய கை வரைந்து.........
வாங்கையோடு வரவேற்ப்பாய் நீ.......!
பள்ளம் படுகுழியானாலும்......
பார்த்து பார்த்து நீ சென்று.....
பணி நிமித்தம் செல்வோரை.....
குறித்த நேரத்தில் கொண்டு சேர்க்கும்......
கூரியர் சர்வீஸ் நீ........!
குக்கிராமங்களையும் விட்டு விடாமல்......
குழந்தையாய் நீ தவழ்ந்து.....
கூச்சல் போடும் மக்கள் கண்டு......
மற்றற்ற மகிழ்ச்சியுடன்....
உன் மார்பில் சுமந்து செல்வாய் நீ......!
ஓட்டுனர் கண் அயர்ந்தும்...........
உன் ஒளிர் விழிகள் அயராது......
எதிர் திசையில் வருவோரை ..........
எச்சரித்து செல்வாய் நீ ......!
மாற்றுத்திரனாளிக்கு இருக்கை கொடுத்து......
மழழைகளை உறங்கச்செய்து ............
முதியோர்களுக்கு முதலிடம் கொடுத்து..........
முப்பெரும் பேருக்கு உரியவன் நீ.......!
இத்தனை பெருமைகள் உனக்கிருந்தும்......
இன்று நீ அழுவது ஏன்.......??????

சப்தமில்லா உந்தன் வருகை......
இன்று செத்தவனும் எழும்பும் சப்தம்......!
உன் நான்கு பாதம் தேய்ந்த நிலையில்......
நகர் வளம் வரும்போது............
உன் அருகில் நான் வரவே ........
உள்ளமெல்லாம் அஞ்சுகின்றனவே......!
உடம்பெல்லாம் ஓட்டை விழுந்து.......
நீ உறுமிச்சீறி பாயும் போது .......
எமனாக மாறி நீயும் .......
எமலோகம் காண செய்திடுவாயோ......!
புரிகிறது உந்தன் குமுறல் சப்தம்...
பொறுத்திரு கொஞ்சம் காலம்....!
தமிழ்நாடு அரசு உன்னை .......
தயங்காது உந்தன் குறைநீக்கி..........
தற்காத்திடுமாம் வெகு விரைவில்....!
எண்ணில் அடங்கா நோய் சுமந்து ......
எங்களையும் சேர்த்து சுமக்கும் உன்னை.....
எப்படித்தான் நான் மறப்பேன்...!!!!!

ஆக்கம் அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.