Saturday, September 21, 2013

மனிதன்


மதியினை ஆறாய்ப்பெற்று
மகத்துவத்தை மூலதனமாய் கற்று
குணமதனில் மாறுபட்டு
கொள்கைகையினை வகுக்கக்கற்று
இவ்வையகத்தை ஆளப்பிறந்தவனே
மனிதன்

படைப்பினத்தில் உயரியபடைப்பாய்
பாரினிலே பலதரப்பாய்
நிறத்தாலும் குணத்தாலும்
வேறுபட்டு இருந்தாலும்
நிலைபாட்டில் மனித இனமாய்
நிறம் மாறாதிருப்பவனே
மனிதன்

இவ்வுலக வாழ்க்கையை
ஊனமில்ல வாழ்க்கையாக
அனைத்திலும் தேர்ச்சியுற்று
ஆகாயம் வரை தனை உயர்த்தி
கானகத்தையும் மாநகராக்கும்
கைதேர்ந்த கலைஞனே
மனிதன்

மனிதனவன் கண்டுபிடிப்பு
மதி செய்த மனத் திகைப்பு
கணப்பொழுது யோசித்தால்
கண்களிலே நீர் சுரக்கும்
மனதினிலே யாசித்தால்
மகிழ்வதனை பங்கிடலாம்

நாகாரீக வாழ்க்கையினை
நகரில் அறிமுகம் செய்து வைத்து
நன்மை தீமை இரண்டையுமே
நயமாய் அவனே அவிழ்த்து விட்டான்

மனிதனில் இருக்கும் நல்ல குணம்
மாறுபட்டால் தனைக் கொல்லும்
புனிதனாக நீ இருந்தால்
புகழ் வந்து உனை அணைக்கும்

மனிதனாகப் பிறந்த நீயும்
மணம் வீசும் மல்லிகையாக
நெஞ்சில் ஈரம் உள்ளவனாய்
நீதி தவறா வல்லவனாய்
பாரெங்கும் பெயரெடுத்து
ஊர் போற்ற வாழ்ந்திடுவாய்

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 05-09-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.