Wednesday, September 30, 2015

சரியான இளிச்சவாயெனா இருக்கியேப்பா.!?


நாம் அன்றாடம் எத்தனையோ வித்தியாசமான குணமுடைய நபர்களை சந்திக்கிறோம்.அதில் ஒன்றுமறியாத வெகுளித்தனமான வெளுத்ததெல்லாம் பாலென நினைக்கும் நபர்களும் அடங்கும். இப்படிப்பட்ட வெகுளித்தனமான நபர்கள் எதையும் யோசிக்காமல் யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள்.எது போலி எது நிஜம் என்று தெரியாமல் ஏமாந்தும் போய்விடுவார்கள். புறத்தோற்றத்தை வைத்து மரியாதைக்குரியவர்கள் என நினைத்து விடுவார்கள்.கள்ளம்கபட மற்ற மனதாக குழந்தைகள் போல நடந்து கொள்வார்கள். இத்தகைய ஒன்றும் அறியாத அப்பாவிகளுக்கு சமுதாயம் சூட்டியுள்ள பட்டம்தான் இழிச்சவாயென் என்பதாகும்.


சொல்லப் போனால் கற்க்காலம் முதல் சமீபகாலம் வரை நாம் அனைவருமே இளிச்சவாயெனாகத்தான் இருந்தோம் என்றே சொல்லலாம்..எப்படிஎன்றால் அன்று அனைத்துமே நம்பும்படியாகவும்,உண்மையும்,நேர்மையும் நம்பிக்கையும் நாணயமும் இருந்தன. ஆதலால் இன்று இலிச்சவாயென்கள் என்று பெயர் எடுப்பவர்கள் தான் அன்று உண்மையாக வெகுளித்தனமாக வாழ்ந்தவர்களாவார். அப்போது அவர்களைப் பார்த்து யாரும் இலிச்சவாயென் என்று சொன்னதில்லை. காரணம் அதிகபட்சம் நேர்மையானவர்களே வாழ்ந்த காலம் அது.

இன்றைக்கு இலிச்சவாயென் என்று பெயரெடுத்தவர்கள் செய்யும் வேலையைத்தான் அன்று வாழ்ந்த ஒவ்வொரு மனிதர்களும் செய்துவந்தார்கள். மனதில் கள்ளம் கபடமில்லாமல் உண்மையாக நேர்மையாக நம்பிக்கையாக அனைத்து விசயங்களிலும் கடைப்பிடித்து வந்தவர்களே அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தார்கள்.

ஆதலால்தான் இலிச்சவாயென் என்ற வார்த்தை உபயோகத்தில் இல்லாமல் இருந்துவந்தது. அத்தகைய நேர்மையானவர்கள் உண்மையாளர்கள் குறைந்து எல்லாவற்றிலும் ஏமாற்றுக்காரர்கள் போலித்தனமானவர்கள் பெருகிவிட்டபடியால் வெகுளித்தனமாக இருக்கும் நல்லோர்களெல்லாம் இலிச்சவாயென் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.

காலமாற்றத்தில் நாகரிக வளர்ச்சியில் விஞ்ஞானமும் நவீனமும் நாளுக்கு நாள் வளர்ந்த பிறகு எல்லாவற்றையும் கற்றறிந்த மனிதன் உயர்வானவனாகவும் இத்தகைய நவீனத்தின்பால் செல்லாமல் சராசரி வாழ்க்கையை நேர்மையாக வாழ்பவன் இலிச்சவாயெனென்ற கேலிப் பெயரை சுமந்தவர்களாக வாழ்கிறார்கள்.

அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் இன்றைய காலகட்டத்தில் நேர்மையாளர்கள் கேளிக்குரியவர்களாகவும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்ற பெயருடனும் ஏமாற்றுக்கார்கள் மோசடிக்கார்கள் திறமையாளர்களாகவும் மரியாதைக்குரியவர்களாகவும் சமூகத்தாரர்களால் போற்றப்படுகிறார்கள் என்பதுதான் நடைமுறை யில் நிகழ்ந்து வரும் நிதர்சன உண்மையாக இருந்து வருகிறது.

பண்டைய நாகரீக வாழ்க்கையை விரும்பி அதன்படி நடந்து வந்தாலும் இன்றைய நாகரீக வாழ்க்கைக்கும் பழக்கத்திற்கும் பொருத்தமாக நடப்பதும் காலத்தின் கட்டாயமாகி விட்டது.படிப்பறிவு இல்லாதவர்கையிலெல்லாம் பல புதிய வடிவத்தில் ஆண்ட்ராயிடு போனும் மழைக்கு கூட பள்ளிக் கூடம் அருகில் ஒதுங்காதவர்கள் மடியிலெல்லாம் மடிக்கணினியும் தவழத் தொடங்கிவிட்டது.

இப்படி மனிதனது போக்கு படிப்பறிவுக்கு சம்பந்தமே இல்லாமல் நாளுக்கு நாள் நவீனத்தின்பால் முன்னேறிக் கொண்டு போவதால் இத்தகைய பெயர் வராமல் இருக்க இக்காலகட்டத்தில் அனைத்திலும் விழிப்புணர்வு பெற்றிருப்பது அவசியமாக இருக்கிறது. உலக நடப்பு கால சூழ்நிலை அறிந்து அதற்க்கு ஏற்ப ஒத்து போகவேண்டியுள்ளது..அதற்காக ஒருவரது தவறான வழியை நாமும் பின்பற்றவேண்டும் என்பது அற்த்தமல்ல. எப்போதும் எந்த சூழ்நிலையிலும் . நாம் நேர்மையை விட்டு சிறிதளவும் மாறாமல் அதேசமயம் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான அவசியமாக்கப்பட்ட அனைத்தையும் நாமும் அறிந்து கொள்ள முயற்ச்சிக்கவேண்டும். அப்போதுதான் இன்றைய காலகட்டத்தில் வாழும் சமூக மக்களோடு சரிசமமாக பழகமுடியும். அப்போதுதான் நாம் இலிச்சவாயெனென்ற பெயரை சுமக்காமல் இக்கால மக்களோடு ஒன்றுகூடி வாழமுடியும்.!

அதிரை மெய்சா

5 comments:

  1. தாங்களின் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. அருமை இக்காலத்தின் அவசியம்தான் இந்த பதிஉ.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அருமை இக்காலத்தின் அவசியம்தான் இந்த பதிஉ.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தாங்களின் வருகைக்கும் கருத்து பதிந்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.