Friday, August 7, 2015

எங்க ஊரு அதிரை - சிறப்பு-- 2

அதிரையினை அழகாக்கி
அணியணியாய் நெய்த கவி
அகிலமெல்லாம் பெயரெடுத்த
அதிரைச் சிறப்பை சொல்லும்கவி


அன்பொழுகப் பழகும் மக்கள்
அதிரையெங்கும் நிறைந்திருப்பர்
பண்புகளைக் கற்றுத்தர
பல நல்லோர் காத்திருப்பார்

சென்னைமுதல் சீமைவரை
செவிகேட்கும் அதிரையர் குரல்
செந்தமிழை அழகாய்ப் பேசி
செல்லுமிடம் சிறப்பு சேர்ப்பர்

மதுரையிலே கிடைக்காதது
அதிரையிலே கிடைத்திடுமே
மாமரத்து குயிலினோசை
மாறிமாறி ஒலித்திடுமே

ஆலிம்களும் உலமாக்களும்
ஆளும் ஊரு நம்ம ஊரு
ஆதிமுதல் இன்றுவரை
அறிவாளிகள் நிறைந்த ஊரு

சாதி மத பேதமின்றி
சமத்துவத்தை விரும்பும் ஊரு
நாதியில்லா அனாதைகளும்
நம்பிவந்து வாழும் ஊரு

பஞ்சம் பிழைக்க ஏத்த ஊரு
பாரிலோன்று இருக்குபாரு
பாமரனையும் பணக்காரனாக்கும்
பலதொழிலும் செய்யும் ஊரு

பள்ளி கல்வி பாடசாலை
பலதும் உண்டு அதிரையூரில்
பாங்குசப்தம் கேட்டு இங்கு
பாய்ந்து செல்லும் மக்கள்பாரு

கடலோரம் அமைந்த ஊராம்
கடல்மீனும் கிடைத்திடுமாம்
காசுபணம் பஞ்சமில்லா
கடும் உழைப்பில் உயர்ந்த ஊராம்

ஏரி குளம் நிறைந்த ஊரு
ஏகத்துக்கும் பசுமை பாரு
ஏகத்துவக் கொள்கையிலே
ஏற்றம்கண்டது எங்களூரு

உழைக்கும் மக்கள் நிறைந்த ஊரு
உண்மையாளர் வாழும் ஊரு
தானதர்மம் வழங்கும் ஊரு
தரணி போற்றும் நல்ல ஊரு

வந்தாரை வாழவைத்து
வனப்பாக்கி அழகு பார்க்கும்
வறியோரை வாரியணைத்து
வயித்துப்பசி போக்கச் செய்யும்

ஆங்காங்கே உள்ளகுறை
அதன் ஏக்கம் புரிந்ததப்பா
அவையனைத்தும் நிறைவாக்க
அனைவர் கையும் சேரனுமப்பா

எக்குறைகள் இருந்தபோதும்
ஏற்றமானது நம் அதிரை
ஏட்டினிலே எழுதவேண்டும்
எட்டுத்திசையும் புகழ்மணக்க

அடுக்கடுக்காய் குறையிருந்தும்
அதன் நிறைவு பல உண்டு
மார்தட்டிச் சொல்ல நாமும்
மாநகர்போல் வாழும் ஊரு
அதிரை மெய்சா

10 comments:

  1. சூப்பர் கவிதை..வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. தாங்களின்வாழ்த்திற்கு .மிக்க நன்றி.

      நமதூரை பெருமைபட சொல்லி பிறருக்கு அறியப் படுத்துவது நம் கடமையல்லவா.!

      Delete
  2. Replies
    1. கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

      Delete
  3. பிறந்த மண்ணின் மிகையில்லாப் பெருமைகள்

    ReplyDelete
  4. பிறந்த மண்ணின் மிகையில்லாப் பெருமைகள்

    ReplyDelete
    Replies
    1. ஒருவரியில் கருத்து சொன்னாலும் உன்னதமாய் சொல்லியுள்ளீர்கள். அருமை அருமை.

      நன்றி வாழ்த்துக்கள் காக்கா.

      Delete
  5. ஆஹா...!

    அதிரையை அழகாய்ச் சொல்லியுள்ளாய்!

    வெளியூர்க்காரர்கள் வாசித்தால்கூட அதிரையை விரும்புவர்.

    வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. உன்பாராட்டுதலுக்கு நன்றி நண்பா.!

      ஆம் நீ சொல்வதுபோல பிற வெளியூர்காரர்களுக்கும் நமதூரின் பெருமைகள் அறிந்திட வேண்டும்.

      Delete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.