Thursday, March 19, 2015

தாய்மை !

ஒவ்வொரு உயிரையும்
இவ்வுலகுக்கு அறிமுகப்படுத்தும்
உன்னத உறவே தாய்மை


அன்பின் முதல் அடையாளமாய்
அவதானிக்கும் முதல் உறவாய்
பண்பின் பரிணாமமாய்
பரிவோடு சேவைசெய்யும்
பகட்டில்லா உறவே
தாய்மை

கருவுற்ற காலமுதல்
கருமுற்றிக் கனியும் வரை
உடல்நோகி உயிர் வலித்தும்
உதிரம் கொடுத்து உணவளிக்கும்
ஒப்பற்ற உறவே தாய்மை

மண்ணில் பிறந்து
மடியில் தவழ்ந்து
மனதில் வாழ்ந்து
மகிழ்வினை பகிரும்
மகத்துவம் நிறைந்த
மதிதொடும் உறவே தாய்மை

உண்ணமறந்து உறங்க மறந்து
உன்நினைவையே உண்டு மகிழ்ந்து
தன்னை மறந்து தன்னவனையும் மறந்து
தானீன்ற தங்கப் பிள்ளைமறவா
தரமிக்க மனம் கொண்ட உறவே
தாய்மை

பத்துமாதம் மட்டுமல்ல
வாழ்வின் மொத்தமாதமும்
நித்தமும் மனத்தில் சுமந்து
நிம்மதியை தியாகம் செய்யும்
நிகரற்ற உயிரின் ஒருபகுதியாம்
தாய்மை

எதை அள்ளி எதை விட
எதை தள்ளி எதை தொட
எல்லாம் தாய்மையின் வழிகாட்டுதலே

தாய்மையைப் போற்றுவது
தூய்மையின் மறுபிறப்பு
தாயாகி அணைப்பது
தலைசிறந்த மனிதச் சிறப்பு

இந்தக் கவிதை கடந்த 20/03/2015 அன்று துபாய் கராமாவில் உள்ள சிவ்ஸ்டார் பவனில் வானலை வளர்தமிழ் நடத்திய மகளிர்தின சிறப்புக் கவிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

அதன் YOTUBE LINK இதோ ......


https://www.youtube.com/watch?v=yCXb1apn37Y

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.