Wednesday, March 4, 2015

ஆகாய விமானம் !

அந்தரத்தில் பறக்கும்
ஆகாய அதிசயம்
மந்திரத்தை விஞ்சிடும்
எந்திரக் கண்டுபிடிப்பு உன்னுருவம்


உன் சுந்தரப் போக்கில்
சொகுசானதொரு பயணம்
சொல்லிமாளா துயர்கூட
சொல்லாமல் வந்திடும் சிலசமயம்

நீள்வட்டப் பறவைபோல
உன் தோற்றம்
நிகரில்லா உன்வேகம் கூச்செறியும்
பல்லாயிரம் மைல் கடக்கும் சாதுரியம்
பணிவாகத் தரையிறங்கும் ஆச்சரியம்

தொலைதூர நாடெல்லாம்
தொடும் தூரம்
உன் தோன்றுதலில் தானன்றோ
உலகச் சுருக்கம்

திசையறியா வான்வெளியில் சாகசம்
தேசமெங்கும் வலம்வந்து திகைப்பூட்டும்
திகில் நிறைந்த திண்ணமான உம் பயணம்
திரும்ப வைக்கும் இவ்வுலகில் பிறவி மீண்டும்

ஓயாது நாள் தோறும் உம்பயணம் -  நீ
ஓய்வடைந்தால் உலகெல்லாம் ஸ்தம்பிக்கும்
சாயாமல் நீ சென்றால் சந்தோசம்
சனி விலகிப் பயணித்தால் சுகஇன்பம்

இத்தனைக்கும் சொந்தமாய்
இகத்திலோர் இன்பவாகனம்
ஏற்றமாய் பயணிக்க
இனிமையாம் ஆகாய விமானம்

இறுதியாய்ச் சொல்வதானால்
இகமுடிவுக்கு இதுவும் ஓர் அடையாளம்
உறுதியாய் நம்புவோமானால்
உலகாளும்
இறையோனின் மகத்துவத்தில்
இதுவும்கூட ஒன்றாகும்

YOUTUBE- காணொளியில் இந்தக் கவிதை15.10 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.



அதிரை மெய்சா



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.