உன் வரவாலே உலகியங்கும்
அகிலமெங்கும் உன் வெளிச்சம்
ஆண்டவன் கட்டளை இதன் தோற்றம்
ஆதவனின் மகத்துவத்தை
அறியாதோர் யாருமுண்டோ
அந்தி சாய்ந்து இருளும்போது
ஆதவனைப் பார்த்ததுண்டோ
ஆதவனே இல்லையெனில்
ஆதிமுதல் ஏதுமில்லை
அனைத்துயிரும் வாழ்வதற்கு
ஆதவனே அவசியத்தேவை
ஆரம்பமே இல்லையெனில்
அவதானிக்க யாரிருப்பார்
அழிந்து போகும் இவ்வுலகில்
ஆதவனும் சேர்ந்தழியும்
ஆதவனைப் போற்றுவது
ஆறறிவு மனிதச் சிறப்பு
அறியாமையில் வணங்குவது
அறிவுக்குப் பேரிழப்பு
சுட்டெரிக்கும் சூரியனாய்
சுடர்விட்டு ஒளிர்ந்தாலும்
மற்றுருத்தி பகலிரவாய்
மாறி வருவது உன் சிறப்பு
ஆதவனே ஆளவந்தால்
அழிந்துபோகும் அகிலம்யாவும்
அகிலம் முழுதையும் ஆளும் இறை
ஆட்டுவிப்பான் ஆதவனை
குறிப்பு : இந்த கவிதை கடந்த [ 11-12-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. கீழே உள்ள காணொளியில் 4 வது நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது.
இந்த கவிதையை ஜெர்மனிவாழ் கவிஞர் கவிக்கோ பரம விஸ்வலிங்கம் அவர்கள் தானாக முன்வந்து இவற்றை சொந்த குரலில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/watch?v=IlVEHGzXo40#t=73
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.