Monday, October 13, 2014

எங்க ஊரு அதிரை

எங்க ஊரு அதிரை...

அதிரையின் சிறப்பினை சொல்லிப் புகழ்ந்திட
அக்கவிஞ்சனும் தேடுவான் வர்ணனை வார்த்தைக்கு....!

திரும்பும் திசைகளெல்லாம்  பள்ளிவாசல்கள்...
தக்க சமத்துவம் போதிக்க எத்தீம்கானா குர்ஆன் பள்ளிகள்..!
மடிப்பிள்ளை முதல், மாணாக்கர் வரை பயில பாடசாலைகள்..
மார்க்கக் கல்வியை முறையாய் பயின்றிட மதரஸாக்கள்..!
ஊர் செழிப்பாய் நிர்வகிக்க பேரூராட்சி ....
உலகமெல்லாம் செய்திகள் பரப்பிட மீடியாக்கள்...
தெருவெல்லாம் கடைகள் முளைத்து தோரணைகள்...
தென்றல் வந்த  சாலைகளெல்லாம் வாகனங்கள்...!
தருசு நிலமெல்லாம் இன்று  தங்க மாளிகைகள்...
தடுக்கி விழும் சந்துகளெல்லாம்   தார்சாலைகள்...!
வாழ வந்தோரை வாழவைக்கும் அதிரை மக்கள் ........
வான்புகழ் போற்றிடும்  உலமாக்கள் ஆலிம்கள்....!
ஊர் சிறக்க பாடுபடும்  உண்மையாளர்கள்....
ஊரறிய வாழ்ந்து மறைந்து மனதில் நிற்கும் உத்தமர்கள்...
அல்லி வழங்க பல்லாயிரம் செல்வந்தர்கள்...
அரவணைத்து உபசரிக்க உதவும் அமைப்புக்கள்..
.
அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் அரீத சேவைகள்...
அல்லும் பகலும் அயராதுழைத்திடும் ஆன்மாக்கள்....!
அவசர கால உதவிக்கு ஆம்புலன்சுகள்...
அன்பாய் உதவிடும்  பொதுச்சேவகர்கள்..!
ஊர் காக்க  உள்ளனவாம் காவல் நிலையம்...
உயிர் காக்க உள்ளனராம் மருத்துவர்கள்...!
இலவச சேவைக்கு அரசு மருத்துவமனை...
இன்றியமையாத் தேவைக்கு தபால் நிலையம்...!
சொத்துக்கள் பதிந்திட சர்பதிவாளர் அலுவலகம்...
சுணங்காது வந்து சேவைகள் செய்திட மின்சார வாரியம்...!
வணிகம் பெருத்திட பற்பல வங்கிகள்...
வானுயர எழுந்து நிற்கும் அலைபேசி கோபுரங்கள்..!
கடல் அருகில் அமைந்திருக்கும் எங்கள் ஊரில்...
காய்கனியும் கடல்மீனும் கிடைத்திடுமாம் கணக்கில்லாமல்...!
சொகுசுப்பேரூந்து புகைவண்டி முதல்….
சொன்ன நிமிடம் வந்து நிற்கும்  ஆட்டோ வரை...
 அனைத்தும் உள்ளனவாம் எங்கள் அதிரை ஊரில்...!
தட்டெழுத்துப் பயிற்சி முதல் தொட்டெழுத்துக் கணிணி வரை
 தாராளமாய் கிடைக்குமாம் எங்களூரில்...!
இன்னும் எத்தனையோ சிறப்புக்கள் எங்கள் ஊருக்கு.
..எண்ணி மகிழ்கிறோம் எங்கள் மண்ணிற்கு...!
ஏரி குளம் எல்லாம் நிறைந்திருக்கும் எங்கள் ஊரில்...
 என்ன குறை இருக்கிறது நாங்கள் வாழ்வதற்கு...!
காடுகரை என்று நினைத்த  காலம் போய்...
கடின உழைப்பும், தொழிலும், பணியும் செய்து வளர்ந்து...
இன்று காசு பணம் பல்கிப் பெருத்த செல்வச் சீமையாம்....
எங்கள் அதிராம்பட்டினம்..!!!

அதிரை மெய்சா 

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 03-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...YOUTUBE--ல் 39.48 வது நிமிடத்தில் வாசிக்கப் படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.