Friday, October 24, 2014

வெற்றியின் வித்து !

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
ஒளிந்துகிடக்கும்
உந்தல் சக்தியே
வெற்றியின் வித்து


பூவாக்கிக் காயாக்கி
கனிதரும் நல்ல மரமாக்கி
காலமெல்லாம் பயன்பெறுவதும்
வெற்றிக்கு இட்ட வித்தே

வித்திட்டு முயற்சித்தல்
வெற்றிக்கு அறிகுறியே
வேதவாக்காய் எண்ணுவதும்
வித்துக்கு முதற்ப்படியே

வல்லவரும் வித்திட்டே
வீரனாக வலம்வருவர்
விந்தையரிந்த நல்லவரும்
வித்திடாதில்
வெல்ல மாட்டார்

நட்புக்கு வித்து நல்மனது
நற்ப்பண்பிற்கு வித்து நல்லொழுக்கம்
அன்பிற்கு வித்து அரவணைப்பு
ஆசைக்கு வித்து ஆன்மாவின் ஈர்ப்பு
உறவுக்கு வித்து உரிமை
உண்மைக்கு வித்து நேர்மை

ஆக

உப்பில்லா பண்டம் குப்பையிலே
வித்தில்லா வாழ்வு வீதியிலே
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 25-09-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இந்த கவிதை கானொளியில் 13 வது  நிமிடத்தில் வாசிக்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.