கல்லறை முடிய
மறுவழியில்லா
ஒரு வழிப்பயணம்
அகிலத்தின் பயணம்
மகிழத்தரும் பயணம்
அகமுணர்ந்து நடந்தால்
பயம்தரும் பயணம்
மனம்போன போக்கில்
தினமொரு பயணம்
மாறாக பயணிக்கும்
மறுமையின் பயணம்
பயணிக்கும் நேரகாலம்
வெவ்வேறு ஆனாலும்
பயணமுடிவில் இணைவது
திரும்பி வர இயலா
திசைமறக்கும் பயணம்
வாழ்க்கைப் பயணத்தில்
வழித்தடம் மாறலாம்
வழிமாறா வலிமை குறையா
வானவர் அழைத்துச் செல்லும்
வனப்பு மிக்கது இப்பயணம்
இறுதிப் பயணம்
இன்றியமையாப் பயணம்
இல்லறம் விட்டு
இன்னபல உறவுகளை விட்டு
இவ்வுலகை விட்டு
இறையோனைக் காணச்செல்லும்
ஈடில்லா பயணம்
எத்தனை கோடி வழியிருந்தும்
எவ் வழியில் பயணித்த போதும்
அத்தனையும் சங்கமமாகி
அனைவரும் மேற்க்கொள்ளயிருக்கும்
அவ்வழிப் பயணமே
ஒரு வழிப்பயணம்
எவ்வழி சென்றாலும்
எதைப்பற்றிக் கொண்டாலும்
இகமுடிவு ஆனபின்பு
அனைத்துலக மக்களும்
அகிலம் விட்டுப்பயணிக்கும்
அவ்வழிப் பயணமே
இறுதிப் பயணமாம்
ஒரு வழிப்பயணம்
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.