தீபாவளித் திருநாளை முன்னிட்டு
ரூபன்&யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014
போட்டியில் கலந்து கொள்ளும் கவிதை தளத்தில் பதிந்திருக்க வேண்டும் என்கிற நிபந்தனையின் காரணத்தால் இக்கவிதை தளத்தில் பதியப்படுகிறது.
ஓவியப் பெண்
------------------------
ஓவியக் கவிதையில்
காவியம் படைத்திட
உன்னருகில் அமர்ந்து நான்
கண்ணிறைந்து ரசித்தேனே
கூடைப் பூவுக்கும் அவசியமில்லை
உன் கூந்தலில் மணத்திடும்
ஒருகோடி முல்லை
மாலைப் பொழுதினில்
மன்னவன் வரவுக்கு
மகிழவே காத்திருக்கும்
உன்னழகு உடலன்றோ
சேலைக்கட்டிலே செந்தமிழ்
மணத்திடும்
உன் செவ்விதழ் ஓரத்தில்
சிரித்திடும் புன்னகை
மாலைக் கதிரவன்
மனமிறங்கி மறைந்திட
மங்கிய ஒளியிலும்
தெரிந்திடும் உன்முகம்
சோலைக் காற்றெல்லாம்
சொக்கிச் சொந்தம் கொண்டாடிட
சொப்பனம் களைந்ததும்
சுவற்றை நோக்கிப்பார்த்தால் .....
அட நீ ஓவியப் பெண்
காலை வெளுத்ததும்
கண்டது கனவாயினும்
தேடலில் தேய்ந்தது
தேகமும் பாதமும்
காரணம் ஏனெனில்
கள்ளமில்லா உள்ளமும்
கபடமற்ற பார்வையும்
பூப்போன்ற தோற்றமும்
கொண்ட
பொன்மகள் நாயகியாம் நீ
உனக்குப்
பூமாலை சூட்டவே
எனது ஏக்கம்
உன்போன்ற
ஓவியப்பெண்
உயிர்த்தெழுந்து
உயிரில் கலந்து
என்வாழ்வில்
ஒளிர்ந்திருந்தால்....
நான் என்னவாயிருப்பேன்.??
அதிரை மெய்சா
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteNice one!
ReplyDelete