Wednesday, March 12, 2014

ஏக்கம் !


தூக்கத்தில் கூட புலம்பவைக்கும்
துயர் நிகழ்விலும் பங்கேற்கும்

தாக்கத்தை ஏற்ப்படுத்தும்
நோக்கத்தை நொறுக்கிவிடும்

ஏக்கங்கள் உருவெடுத்தால்
ஆக்கங்கள் நிலைகுலையும்

எல்லோர்க்கும் இயல்பாய் வரும் ஏக்கம்
வல்லோர்க்கு இல்லை இதன் தாக்கம்

இல்லார்க்கு இயலாமை தரும் ஏக்கம்
இருப்போர்க்கு மேலும் சேர்க்க ஏக்கம்

முதியோர்க்கு முகத்தில் தெரியும் ஏக்கம்
அறிந்தோர்க்கு அகம் உணரும் ஏக்கம்

நம்புவோரை நாடாதிந்த ஏக்கம்
நலிந்தோரை வாட்டுமிந்த ஏக்கம்

நட்பின்பால் ஏற்படுமிந்த ஏக்கம்
தப்பின்பால் வரும் என்றும் இணக்கம்

ஏங்கி நிற்கும் யாவருக்கும்
தாங்கிவரும் மனச்சுமையாய்

எள்ளளவு ஏக்கங்களே
இமயமாய் உயர்ந்து நிற்கும்

ஏங்குவது மனிதனின் இயற்கையானால்
தாங்குவது தன்னலத்தின் அவசியமாகும்

சொல்லளவில் நில்லாமல் - ஏங்கிச்
சோர்ந்துகவலை கொள்ளாமல்

ஏக்கம் தவிர்ப்போம் எந்நாளும்
ஏணியாய் உயர்வோம் நாள்தோறும்

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.