Wednesday, March 5, 2014

மறதி !


மறதியில்லா மனிதர்கள்-இம்
மண்ணுலகில் இருப்பது அரிதே
மமதை கொண்டு நடப்பவர்
மனதை விட்டு மறந்து போவர்

அன்பொழுகப் பழகிவந்த
நண்பனையும் மறந்திடுவர்
அகந்தை கொண்டு நடந்திட்டு
ஆணவத்தில் மூழ்கிடுவர்

அன்னை தந்தை மறப்பவர்
அன்பு அறியா அரக்கனாவர்
அகிலத்தை மறப்பவர்
துயரத்தை அணைத்திடுவர்

கேடுவினை மறப்பவர்
காலமெல்லாம் நலம்பெறுவர்
கண்ணியத்தை மறப்பவர்
தன்னிலையில் மாறுபடுவர்

அகிலத்தில் வாழ நாமும்
துயரத்தை மறந்திடுவோம்
ஆண்டவன் சன்னதியில்
அனைவருமே மறதியுடையோர்

நல்லதை மறப்பவர்
தொல்லை தரும்விஷமிகள்
நாள் முழுக்க மறப்பவர்
நகர் முழுக்க திரிபவர்கள்

செய் நன்றி மறப்பவர்
மெய் மறந்த மூடர்கள்
சேர்த்து வைத்த செல்வமதில்
நாட்டம் கொண்டு தனைமறப்பர்

மறைந்தவர் யாவருமே
மறப்பவர் என்றென்றும்- நற்க்
குணம் கொண்டு மறைந்தவர்
மனதினிலே வாழ்ந்திடுவர்

நினைப்பதற்கு மனமிருந்தால்
மறப்பதற்கும் மனம் வேண்டும்
நெஞ்சில் ஈரம் நிலைத்திருந்தால்
வஞ்சம் கூட மாறிப்போகும்

மறப்பதும் மன்னிப்பதும்
மனிதகுணத்தின் சிறப்பன்றோ
வெறுப்பதும் துறப்பதும்
வீரனுக்கு அழகன்றே

எத்தகைய நிகழ்வினையும்
அத்தருணம் மறந்திட்டாலும்
இறை வகுத்த நல்வழியை
மறவாமல் கடைபிடிப்போம்.
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.