Sunday, December 29, 2013

விளைநிலத்தின் புலம்பல் !


நீர் கேட்டு நா வறண்டு
நெடு நாளாய்ப் போராட்டம்
வறண்டது
நா மட்டு மல்ல
நாம் பசுமையாய் கண்ட
நஞ்சையும்
புஞ்சையும் தான்


காவிரித்தாய்
கண் திறவ மறுத்திட
கனத்த மேகமும்
கருமிருளாய் வந்து
மறைந்ததுவே

முல்லைப்பெரியாரும்
முகம் சுழித்துப்போக
அகம் நொந்து
அழுது புலம்பியதுதே
விளைநிலங்கள்

தாகத்திற்கு
தண்ணீர் தர
மறுத்திட்ட
தரமில்லா
மனித வர்க்க
மனம் கண்டு

காய்ந்த பூமியின்
கந்தக அலைகள்
கடும் நெருப்பாய்
சுட்டுப்பொசுக்க

நிலத்தடி நீரை எடுத்திட்டு
நிலம் மகிழ பாய்ச்சிடவே
மின்சாரமும் தடைபட்டு
மின்மினிப் பூச்சிகளாய்
மின்னி மறைந்துப்
போனதுவே

யான் பட்ட கஷ்ட்டங்கள்
யாவரும் அறிந்தும்
அறியாது
ஆணவமாய் பேசினரே
அகம் மகிழக்
கூறினரே
விளை நிலத்தில்
பயனில்லை
விவசாயம்
தழைக்க வில்லை
வீடு கட்ட உகந்த இடம்
விருத்தியுள்ள
நிலமிதுவே எனக்கூறி

காடுகரை எனச்சொன்ன
காய்ந்த நிலமெல்லாம்
காசாகிப்போனதுவே
கல்வீடும் முளைத்ததுவே

நான் வளர்த்த மனித இனம்
நன்றி சொல்லி நினையாமல்
என்னை
கூறு போட்டு விற்றனரே
கொள்ளை லாபம்
கண்டனரே..!
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.