Friday, November 15, 2013

சுற்றுச் சூழல் சீர்கேடும்... அதன் தீர்வுகளும்...!


சுற்றிச் சுழலும் இப்புவிதனிலே
மனிதன் சுகபோக வாழ்வை தேடி
சுற்றமும் நட்பும் சூழவந்து
சுகாதாரத்தை அழிக்கின்றான்
சுகமாய் வாழ நினைக்கின்றான்

பட்டும் திருந்தா பாவிமகன்
பஞ்சணையில் படுத்துறங்கி
நச்சுக்காற்றை சுவாசித்து
நெஞ்சடைத்துப் போகின்றான்
நிஜவாழ்வை நிழலாக்கி மடிகின்றான்

கொட்டும் கூலம் குப்பையிலே
உலகின் சுற்றுச்சூழலை மாசாக்கி
பன்றிக்காய்ச்சல் பறவைக்காய்ச்சலென
பாரினில் பற்ப்பல நோயை கண்டெடுத்து
பாராமுகமாய் இருக்கின்றான்
பற்ப்பல இன்னலும் அடைகின்றான்

நவீன உலகின் மாயவலையில்
நலிந்தது இந்த ஓசான் வலை

தரமாய் விஞ்ஞானம் வளர்த்திடவே
தனைக்காக்கும் ஓசானையும் ஓட்டையிட்டான்
ஒவ்வொரு கோளையும் பார்த்து வந்தான்

வந்து போன மாயானும்
ஏமாந்து தான் போனான்
மாசுபட்ட உன் காற்றை
சுவாசிக்க மனமில்லாமல்

பிறப்பினக் கணக்கையும்
இறப்பினம் வென்றதாம்
இருளாக்கி இனமழிக்கும்
இச்சுகாதாரக் கேடே

எட்டுத்திசையிலும் சீர்கேடு
என்று தீரும் இக்குறைபாடு
எத்தனை தீர்வுகள் வந்தாலும்
எமனாய் இருப்பது முறைகேடு

அத்தனை தீர்வுக்கும் பதில்தரவே
அரசாலும் தலைவர்கள் பொறுப்போடு
அடியேன் உந்தன் புறப்பாடு

தீங்கிழைக்கும் மாசுப்புகையை கட்டுப்படுத்து
திண்ணமாய் வாழ்ந்திட நீ வித்துயிடு

குப்பைகள் கூலங்கள் கூட்டியல்லு
கூடியிருக்கும் நட்புக்கும் சொல்லிக்கொடு

அசுத்தமென பாராமல் அள்ளியெடு
அஞ்சாமல் அறப்பணியில் வென்றுவிடு

அகிலமெல்லாம் அழகாகிட அவதாரமெடு
ஆண்டவனும் ஆசிர்வதிப்பான் வியந்து நின்று

பசுமைகள் தழைத்தோங்க பாடுபடு
பஞ்சமில்லா சுகாதாரம் தேடி விடு

இயற்கையோடு என்றும் நீ இணைந்து இரு
இன்பமாய் என்றென்றும் வாழ்ந்து விடு

நிகழ்நாளில் நீ நடத்தும் தூய பணி
நெடுநாட்கள் வாழவைக்கும் சமுதாயப்பணி

வீடு வளம்பெறின்
நாடு வளம்பெறும்
நாடு வளம்பெறின்
இவ்வுலகம் நலம்பெறும்
தீர்வின் இறுதி விழிம்பில்
தீர்ப்பான சொல்லிதுவே

கேளாய் மகனே கேளென்று
கேட்டிட மக்களுரை எத்திவைத்து
சொல்லிடும் வார்த்தைகள் செவிமடுத்து
சுத்தமும் சுகாதாரமும் பேணிடுவோம்
தூய நம் வாழ்வை துவங்கிடுவோம்

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 31-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ....

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.