Friday, October 4, 2013

[ 9 ] ஏங்கி நின்றான்..! ஏக்கம் தொடர்கிறது...


என் அண்ணன் என் அக்காள்
என்று சொன்ன காலம் போய்
உன்னருகில் வந்திடவே
உள்ளமெல்லாம் அஞ்சுகின்ற
உறவை நினைத்து
ஏங்கி நின்றான்..!

அன்று சொன்ன அண்ணன் வாக்கு
ஆனது இன்று பொய் வாக்கு…
சொன்ன சொல்லில் சுத்தமில்லை
சொன்னவன் மனதைச்சுடவுமில்லை
நயமாய் பேசி நெகிழ்வாய் புகழ்ந்து
நம்பிக்கை மோசம் செய்தவனை
எண்ணி மனம்நோகி
ஏங்கி நின்றான்...!

அழிந்து வரும் அன்பு பாசம்
அழியாது நிலைகொள்ள வேண்டுமெனில்
கூட்டுக்குடும்பம் ஒன்றே நமக்கு
குறைவில்லாத அன்பை தரும்
என்று வரும் அந்த இனியநாள்
என்றெண்ணிப்புளம்பி அவனும்
ஏங்கி நின்றான்...!

மாறி வரும் உலகினிலே
மனிதனவன் மாறி விட்டான்
கூடி நெஞ்சம் வரும்போது
கொள்கை விட்டுப்போய் விட்டான்
பண்டை கால பண்பாடுகள்
பாரில் மறந்து போனதெண்ணி
ஏங்கி நின்றான்...!

பாசம் கொண்ட காலம் போய்
பண ஆசை பிடித்த காலம் வந்து
நேசம் கொள்ளா ரத்த பந்தம்
நெருப்பாய் நெஞ்சை சுட்டுப்பொசுக்க
அழிவு கால அடையாளங்களில்
இதுவும் ஒன்றென அவன் நினைத்து
ஏங்கி நின்றான்...!

உலக வாழ்வு உவர்ப்பான வாழ்வு
உண்மை மனிதனின் கசப்பான வாழ்வு
மறுமை வாழ்வே மகத்தான வாழ்வு
மண்ணை பிரிந்த ஆன்மாவின் வாழ்வு
என்று வரும் அம்மறுமை வாழ்வு
என எண்ணி அவனும்
ஏங்கி நின்றான்..!
ஏக்கங்கள் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.