Saturday, September 21, 2013

என் அருமை மருமகனே இனி எங்கு காண்பேன்...???

 
 
முகப்புத்தகத்தில் தினம் நீ முகம்பதிந்து...
அகம் மகிழச்செய்தாயே இனி உன் முகம்...
எங்கு காண்பேன் ..!


நய வஞ்சகனால் கொல்லப்பட்ட...
என் அருமை மருமகனே உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!

குடும்பம் சேர கொஞ்சிப்பேசி...
கரம் சேர்க்க நினைத்த உன்னை இனி...
எங்கு காண்பேன்...!

பார்ப்போரெல்லாம் உன் புகழ் சொல்லி...
பாராட்டிப்போற்றினரே உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!

மின்னலாய் ஒளிர்ந்து விட்டு...
மேகமாய் கலைந்தவனே உன்னை இனி ....
எங்கு காண்பேன்...!

கண்ணீரில் நனையவிட்டு...
மண்ணூரில் புதைந்தவனே உன்னை இனி...
எங்கு காண்பேன்...!

சிட்டாய் பறந்து திரிந்து ...
சுற்றிச்சுற்றி வந்த உன்னை இனி...
எங்கு காண்பேன் ..!

பட்டுப்போன நெஞ்சம் உன்னை...
விட்டுப்பிரிந்த பந்தம்....
தொட்டுக்கொள்ள வந்த நேரம்....
நீயும் தூர விட்டுச்சென்று விட்டாய்...!!!
உன்னை இனி எங்கு காண்பேன் ..!

என் வீட்டு ரோஜாவே...
என் அருமை ராஜாவே....
என் தங்க ஹாஜா வே ....
உன்னை இனி எங்கு காண்பேன்...!

கலங்கிய விழிகளுடன்...
உன் மாமா அதிரை மெய்சா
Rate this posting:
0 : 0

1 comment:

  1. poetry is something which translates the feelings into language and this poem is one of its kind.

    Time will heal your pain.

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.