Friday, October 4, 2013

[ 4 ] ஏங்கி நின்றான்...! ஏக்கம் தொடர்கிறது...


பள்ளிகளில் பாங்கு சப்தம்
படைத்தவனை தொழுது வர
செல்ல மனம் துடிதுடிக்க
சிந்தனையில் கண்ணீர் விட்டு
ஏங்கி நின்றான்
தள்ளாத வயதினிலும்
தளராமல் வாழ்ந்திடவே
மெய்யாக உழைத்திடத்தான்
மெய் மறந்து
ஏங்கி நின்றான்

கடை கடையாய் போய்க்கேட்டான்
கணக்கப்பிள்ளை வேலை செய்ய
வயசாகிப் போனதென்று
வசைபாடிய சொல் கேட்டு
ஏங்கி நின்றான்

அடுத்தவன் குறையை காண்பவன்
அரை மனிதனாய் நான் நினைத்து
தன் குறையை உணர்பவனே
முழு மனிதனாய் நினைக்கும்
முழு மனிதனைத்தேடி
ஏங்கி நின்றான்...!

மீதி வாழ்க்கை வாழ்வதற்கு
மிடுக்கு நடை போடும் உலகில்
மாடி வீட்டு வாழ்க்கை வாழ
மறுபடியும் போய் வரவே
ஏங்கி நின்றான்

மலரும் நினைவுகளாய்...
மனதில் வந்த சிநேகிதர்கள்...
சீண்டியவர்கள் சில்லரைக்காதல் என்று
கடந்த கால வாழ்வை எண்ணி
கணத்து மனம்
ஏங்கி நின்றான்
ஏக்கங்கள் தொடரும்...
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.