Wednesday, September 18, 2013

நம்மை வசப்படுத்தி விட்டதா ? இன்டர்நெட் !

இன்றைய காலத்தில் உலகளவில் அறிந்திறாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து முழுமை அடைந்து விட்ட அறிவியல் சாதனங்களில் முதன்மை நிலையை வகிக்க கூடியது ''இன்டெர் நெட்''[ Internet ] இணையதளம் இன்றைய கால சூழ்நிலைக்கு அனைத்துப்பணிகளுக்கும் இன்றியமையாத ஒன்றாய் நம்முடன் இணைந்து விட்டது.

இதை முதன் முதலில் 1950-ல் கலிபோர்னியா பல்கலை கழகம், லாஸ் ஏஞ்செல்ஸ் [University of California, Los Angeles (UCLA)] ஆய்வுக்கூடத்தில் ''லியோனார்ட் க்ளின்ராக்'' எனும் கணிணி பேராசிரியரால் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு அதை ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி நிறுவனம் [ Stanford Research Institute (SRI) ] முழு வலைதளமாக்கி உலகிற்கு அறிமுகப்படுத்தி இவ்வுலகையே ஆச்சர்யத்துடன் அன்னார்ந்து பார்க்கவைத்தது. பின்பு 1990க்கு பிறகு மின்அஞ்சல் என்னும் உடனடி தகவல் பரிமாற்றம், இண்டர்நெட் புரோட்டோகால் (VoIP) "தொலைபேசி", இரு வழி ஊடாடும் வீடியோ, உட்பட, மற்றும் வணிகத்தில் ஒரு புரட்சிகர தாக்கம், அதன் விவாத வலைப்பதிவுகள், சமூக வலைப்பின்னல், மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மூலம் உலகளாவிய வலை தொடர்பும். ஆராய்ச்சி மற்றும் கல்வி சமூகம் போன்ற NSF மிக அதிவேக பின்புல பிணைய சேவை (vBNS), இன்டெர்நெட் 2, மற்றும் தேசிய LambdaRail போன்ற மேம்பட்ட நெட்வொர்க்குகள் உருவாக்கப்பட்டு முழு பயன்பாடாக பயன் படத்தொடங்கியது. பிறகு நாளடைவில் அதன் செயல்பாட்டு முறைகளை விரிவு படுத்தி இன்று உலகம் முழுதும் பலவகைகளிலும் அடிமட்ட தேவைகளிலிருந்து மேல்மட்டம் வரையிலும் அத்தியாவசிய சாதானமாக மனிதர்களுடன் பின்னிப்பிணைந்து திகழ்கிறது.

இவ்வளவு அதிசயிக்க தக்க அறிய கண்டுபிடிப்பான இச்சாதனத்தை மனிதன் எப்படியெல்லாம் கையாள்கிறான்..???

வணிக நோக்குடனும், சுய தேவைகளுக்காகவும், விளம்பரம் செய்து சம்பாரிக்கும் எண்ணத்துடனும், அரசியல் ஆதாயத்திற்காகவும், இப்படி ஒவ்வொரு மனிதனும் இதன் வாயிலாக தன் சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே உபயோகப்படுத்துகிறவர்கள் ஒரு புறம்...!

வேறு சிலர் இதை ஒரு பொழுபோக்காக பயன்படுத்தி முக புத்தகத்திலும் [ Facebook ] மற்ற பிற தளங்களிலும் பல தரக்குறைவான பதிவுகளாலும், மிகை மிஞ்சிய விமர்சனத்தினாலும் சர்ச்சையை ஏற்படுத்தி பல வழக்குகளில் சிக்கிக்கொள்பவர்கள் ஒரு புறம்...!

அடுத்து சில விஷமிகள் பொய்யான தகவலுடன் மின் அஞ்சல் முகவரியை பதிந்து கொண்டு தன்னை மிகைப்படுத்தி அறிமுகப்படுத்தி கொண்டு பல பொதுமக்களையும் தொழில் அதிபர்களையும், கன்னிப்பெண்களையும், வலை தளத்தில் மாயவலை வீசி மயக்கி மோசடி பண்ணிக்கொண்டிருக்கும் கூட்டம் ஒரு புறம்...!

இன்னும் சிலர் மோசடியை தொழிலாய் கொண்டு அடுத்த நபரின் கடன் அட்டை, வங்கிக்கணக்கு விபரம் அறிந்து கொண்டு வலைதள வழிக்கையாடல் செய்பவர்கள் ஒரு புறம்.

அடுத்து சமுதாய நல விரும்பிகள் சிலர் சமூகத்திற்காக வேண்டி சமூக நலனில் அக்கறை கொண்டு எந்த பிரதி பலனையும் எதிர் பாராது பொது நல நோக்குடன் சிரமம் எடுத்து சேகரித்து புகைப்படங்களையும், செய்திகளையும் அறியப்படுத்த இவ்விணையத்தை கையாள்பவர்கள் ஒரு புறம்...!

அப்படியே சமுதாயத்தொண்டு செய்ய முன் வரும் ஒரு சிலரையும் துவேச மனப்பாண்மைகொண்டு இவ்விணையதளத்தில் எத்தனை வழிகள் உள்ளனவோ அதன் வாயிலாகவும், பின்னூட்டம் வாயிலாகவும் மின்அஞ்சல் வாயிலாகவும் நசுக்க நினைக்கும் கூட்டம் ஒரு புறம்...!

இப்படி பல முகம் கொண்டு மனிதர்கள் மத்தியில் வளம் வந்து அனைவர்களுக்கும் பயன் தந்து கொண்டு இருப்பதுவே வலைதளத்தின் நிதர்சன உண்மை..!

எனவே இவ்வரிய கண்டுபிடிப்பை நமக்கு தந்து பலவகைகளில் உதவியாக உற்ற நண்பனாக விளங்கும் உலகளாவிய இணையத்திற்கு களங்கம் விளைவிக்காமல் அதன் பெருமையையும் சிறப்பையும் பாதுகாக்க வேண்டியது கணினியை உபயோகப்படுத்தும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.
அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.