உணரமட்டுமே முடிந்த
உன்னதப் பொருள் நீ
என்னதொரு ஆச்சரியம்
உன் வருகையை நாடி
இவ்வையகமே காத்திருக்கும்
கண்ணில் தென்படாத நீயே
இவ்வுலகை இயங்கவைக்கும்
உருவமற்ற எரிபொருள்
அசையும் அசையா
அனைத்து ஜீவன்களின்
ஒவ்வொரு ஒளிநொடியும்
உன்னை உட்கொண்டுதானே
இப்புவியில் நிலைகொண்டிருக்கிறது
உன் தீண்டலில் தானே
இவ்வுலகே தாண்டவமாடுகிறது
தன்னிலையும் உணர்கிறது
உன் கோரப்பசிக்கு
அவ்வப்போது உணவாகும் உயிரினம்கூட
உன் வருகை நின்று போவதாலும்
வீழ்ந்து மடிகிறது
கண்ணில் புலப்படா உனது மண்டலத்தில்
எரிவாயு என்றும் விஷவாயு என்றும்
இதமாய் வீசும் தென்றலென்றும்
பதமாய் தீண்டும் பெரும் புயலென்றும்
பன்முகம் காட்டும் நாயகனாம் நீ
இயற்க்கைக்கு நல்லுணவாய்
இயங்கி வாழ மூச்சுக்காற்றாய்
அனைத்திற்கும் அத்தியாவசியமாய்
ஆதிக்கம் செலுத்தி ஆழ்பவன் நீ
சுவாசம் விட்டுப்போனாலும்
உன் வாசம் விட்டுப்போகாது
நிலைகொண்டு
நீர்,நிலம்,நெருப்பினும் மேலாய்
இவ்வுலகை வாழவைக்கும்
வாயுப் பொருளான நீ
சுழன்று கொண்டிருக்கும்
இப்புவியின் கடைசிச்சுற்றுவரை
நீயே இப்பூலோகத்தின் நிரந்தர ஹீரோ
அதிரை மெய்சா
உன்னதப் பொருள் நீ
என்னதொரு ஆச்சரியம்
உன் வருகையை நாடி
இவ்வையகமே காத்திருக்கும்
கண்ணில் தென்படாத நீயே
இவ்வுலகை இயங்கவைக்கும்
உருவமற்ற எரிபொருள்
அசையும் அசையா
அனைத்து ஜீவன்களின்
ஒவ்வொரு ஒளிநொடியும்
உன்னை உட்கொண்டுதானே
இப்புவியில் நிலைகொண்டிருக்கிறது
உன் தீண்டலில் தானே
இவ்வுலகே தாண்டவமாடுகிறது
தன்னிலையும் உணர்கிறது
உன் கோரப்பசிக்கு
அவ்வப்போது உணவாகும் உயிரினம்கூட
உன் வருகை நின்று போவதாலும்
வீழ்ந்து மடிகிறது
கண்ணில் புலப்படா உனது மண்டலத்தில்
எரிவாயு என்றும் விஷவாயு என்றும்
இதமாய் வீசும் தென்றலென்றும்
பதமாய் தீண்டும் பெரும் புயலென்றும்
பன்முகம் காட்டும் நாயகனாம் நீ
இயற்க்கைக்கு நல்லுணவாய்
இயங்கி வாழ மூச்சுக்காற்றாய்
அனைத்திற்கும் அத்தியாவசியமாய்
ஆதிக்கம் செலுத்தி ஆழ்பவன் நீ
சுவாசம் விட்டுப்போனாலும்
உன் வாசம் விட்டுப்போகாது
நிலைகொண்டு
நீர்,நிலம்,நெருப்பினும் மேலாய்
இவ்வுலகை வாழவைக்கும்
வாயுப் பொருளான நீ
சுழன்று கொண்டிருக்கும்
இப்புவியின் கடைசிச்சுற்றுவரை
நீயே இப்பூலோகத்தின் நிரந்தர ஹீரோ
அதிரை மெய்சா
நல்லதொரு கவிதை !
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...