முறிவுகளின் ஆரம்பமாம்
உணர்வுகள் ஒத்து நின்றால்
உள்ளமது தூய்மை பெரும்
ஆழமாக அன்பு கொண்டால்
அரக்கன் கூட அடிபணிவான்
அடிமை வாழ்வு நீங்கி விட்டால்
மனித வாழ்வு தழைத்து நிற்கும்
மனமுறிவில் பகை கொண்டால்
மனதினிலே நிம்மதி போகும்
முகமுறிவு வந்துவிட்டால்
அகம் முறிந்து அன்னியமாகும்
குணமதனை முறித்துக் கொண்டால்
கொள்கையிலே மாற்றம் கொள்வான்
கணப்பொழுது யோசித்தால்
காலமெல்லாம் நலம் பெறலாம்
சிலபேரின் முறிவுகளில்
சினம் நீங்கிப் பகை மறையும்
பலபேரின் முறிவுகளோ
பார் தூற்றப் பகையாகும்
அறிவுடனே செயல் பட்டால்
முறிவுகளும் முற்றுப்பெறும்
அகத்திரையை அகற்றிவிட்டால்
முகத்தினிலே புன்னகை பூக்கும்
பொல்லாத உறவுகளால்
நல் வாழ்வு முறிந்து விடும்
பொல்லாங்கு செய்பவரை
நல்லோர்கள் முறித்துக் கொள்வர்
இல்வாழ்வு முறிந்து விட்டால்
இன்பங்கள் தூர நிற்கும்
இதிகாசம் படைத்திடவே
இயன்றவரை கூடிவாழ்வோம்
அதிரை மெய்சா
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.