Friday, September 13, 2013

சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளத்தின் பங்களிப்பாளர் அதிரை மெய்சா அவர்களின் கவிதை இலண்டன் வானொலியில் ஒளிப்பரப்பு !

இலண்டன் வானொலியில் ஒளிபரப்பாகும் கவிதை நேரம் நிகழ்ச்சிக்கு கவிதை எழுத ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை தோறும் வித்தியாசமாக விருப்புத்தலைப்பிலும், நிறுவனத்தினரால் இடும்  தலைப்பிலும் கவிதை ஆர்வமுள்ளோர் கவிதை பதியலாம்.


விருப்பமுள்ளோர் அனுப்பி வைக்கப்படும் தகுதியான கவிதையை இலண்டன் வானொலியின் இணையதளத்தில் ஒளிபரப்பு செய்வார்கள்.  அந்த வகையில் கடந்த வாரம் அன்று ''அடுத்தவர் எதிர்பார்ப்பு'' என்ற தலைப்புக்கொடுத்து  கவிதை  எழுதச்சொல்லி குறுகிய கால இடைவெளியில் கேட்டிருக்க  அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தளத்தின் பங்களிப்பாளர் அதிரை மெய்சா அவர்கள் உடன் எழுதி  அந்நிறுவனத்திருக்கு அனுப்பி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு தரும் கவிதையை அங்கீகரித்து இலண்டன் தமிழ் வானொலியில் கடந்த [ 25-04-2013 ] வியாழன் அன்று ஒளிப்பரப்பு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம்.

கடந்த  [ 11-04-2013 ] அன்று இவரின்  'ஏங்கி நின்றான்' என்ற தலைப்பிட்ட விழிப்புணர்வுக் கவிதையை ஒளிபரப்பு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்தவர் எதிர்பார்ப்பு :

மண்ணுலகின் மாயவாழ்வில்
மடிதனில் நீ தவழும்போதே
விண்ணுயர வளர்ந்திட்டு
வீறுகொண்டு நின்றிடவே
உள்மனதில் உன்மீது
உறக்கமில்லா கனவுகளில்
கறக்கத்துடன் காத்திருக்கும்
தாயவளின் எதிர்பார்ப்பு

பஞ்சம் பசி போக்க்கிடத்தான்
பாரினிலே வாழ்ந்திடத்தான்
நெஞ்சம் உருகி கேட்டிடும்
நிர்க்கதியான மனிதர்கள்
தஞ்சம் என்று தரணியிலே
தவமாய் கிடந்தும் பாராமல்
கொஞ்சம் ஈரம் படைத்தவர்கள்
கொடுத்துதவும் கரங்களாய்
தர்மம் ஒரு எதிர்பார்ப்பு

கண்ணுக்கு இமையாக
கருமேகத்து மழையாக
மின்னிவரும் ஒளியாக
மிளிர்ந்திருக்கும் உடையாக
கொடியிடையில் நடையாக
கோடிப்பூக்கள் உடலாக
சொல்லில் அடங்கா வரியாக
சுகமான நினைவாக
காதல் ஒரு எதிர்பார்ப்பு

ஆசானின் ஆசைகளோ
அன்பான மாணாக்கள்
அகம் மகிழ தேர்வாகி
அவன் வாழ்வு சிறந்திட்டு
அகிலத்தில் திழைத்திட்டு
அன்புடனே ஆதரிக்கும்
அடியேனை மறவாது
அனுதினமும் நினைவுகூற
அன்னவரின் எதிர்பார்ப்பு

வாக்குகள்பெற வாக்குறுதிபல
வழங்கிட்ட தலைவர்கள்
நாக்குறுதி இல்லாமல்
நழுவிச்செல்லும் செயல் கண்டு
நாட்டுமக்கள் நலம் பயக்க
நல்லவர்கள் ஆட்சி செய்ய
நா வறண்டு நடுப்பகலில்
நடத்திட்ட போராட்டம்
மக்களின் ஒரு எதிர்பார்ப்பு

எதிர்பார்த்து எதிர்பார்த்து
ஏமாந்த நிலைகண்டு
துகில்பாடி வளம் வந்து
தொடரான அவலம் கண்டு
மதியதனை மனம் வென்று
மகிழ்வதனை பகிர்ந்திட்டு
சிறப்புடனே சீராட்டி
செழிப்புடனே வாழ்ந்திருக்க
அனைத்து ஆன்மாக்களின் எதிர்பாப்பு


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.