Friday, July 20, 2018

இளைஞர்களே சற்று சிந்திப்பீர்களா.!?

மரணம் என்பது யாரும் மறுக்க முடியாதது.யாராலும் தடுக்கவும்  முடியாது.அது ஒருநாள் நம்மை நிச்சயம் வந்தே தீரும். அதற்காக மரணத்தை நாம் தேடிப் போகக்கூடாது.இயற்க்கை மரணம் என்பது எல்லோருக்கு மானவை.ஆதலால் பெற்றோர்களும் மற்றோர்களும் எளிதில் ஆறுதல் அடைந்து விடலாம்.
ஆனால் அகால மரணம்,விபத்துக்களில் ஏற்படும் மரணம் அதுவும் இளமைப்பருவத்தில் ஏற்படும் மரணத்தை எந்தப் பெற்றோர்களாலும் அவ்வளவு எளிதாக ஜீரணிக்க முடியாது.

வாகன விபத்துக்களிலும் சாலை விபத்துக்களிலும் இறப்பை சந்திக்கும் இளைஞர்களின் பெற்றோர்களுக்கு அதைவிட துயர் நிகழ்வு வாழ்க்கையில் வேறு எதுவும் இருக்க முடியாது.

பெத்து வளர்த்து படிக்க வைத்து பாசம்காட்டி வாலிபம் வரை ஆளாக்கி தனது பிள்ளையின் எதிர்காலம் குறித்து எத்தனையோ கனவுகளுடன் வாழ்ந்துவரும் பெற்றோர்கள் திடீரென தனது பிள்ளையை சொற்ப்ப ஆயுளில் பறிகொடுத்தால் அதுவும் கோர விபத்துக்களில் பறிகொடுத்தால் அவர்களால் அவ்வளவு எளிதில் அந்த துயர் நிகழ்வை மறந்துவிட முடியாது. காலத்திற்க்கும் மனதில் நீங்காத ரணமாகத்தான் இருக்கும்.அது ஈடு செய்யமுடியாத பேரிழப்பு.

அதைப்பார்க்கும் குடும்பத்தினருக்கும் கூடப்பிறந்தவர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் நிம்மதி இருக்காது.நமது சிறிய கவனக்குறைவு நமக்கு எமனாவதுடன் எல்லோரையும் நிம்மதியிழக்கச்செய்துவிடும்.

இதை மனதில் கொண்டு ஒவ்வொரு இளைஞர்களும் வாகன ஓட்டுநர்களும் நமது விலைமதிப்பிட முடியாத உயிரை காக்க நமது குடும்பம் கவலையின்றி நிம்மதியுடன் இருக்க கவனம் தேவை.வாகனம் ஓட்டுபோதும் சாலையில் நடக்கும் போதும்,கடக்கும்போதும் கவனம் அவசியம் தேவை. ஒவ்வொருவரும் சாலை விதிமுறைகளை சரியாக கடைபிடித்து விழிப்புணர்வுடன் நடந்தால் விபத்துக்களையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தவிர்த்துக்கொள்ளலாம்.


                                                                அதிரை மெய்சா
                                         

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.