Sunday, January 26, 2014

ஓவியம் !


சின்ன விரலுக்குள்
சன்னமாய் ஒளிந்திருக்கும்
சித்திரச்சுவடுக்கள்

சிந்தையில் உருவெடுத்து
சீராய் மிளிர்ந்திருக்கும்
முத்திரைகள்

எண்ணக் கனவுகளை
கையிலடக்கி
வண்ண நினைவுகள்
ஓவியமாய்

மின்னும் ஒளியும் நிலாவும்
மித இருளில் மிதக்கும்
மேகமும் மழையும் கூட
திண்ணமாய் தீட்டினால்
திகட்டாத ஓவியமாகும்

கண்ணுக்கு விருந்தாகி
கருவுக்கு பொருள் சேர்க்கும்

ஓவியத்தில் அறிந்ததுண்டு
காவியத்தின் சரித்திரங்கள்

ஓவியமும் கதைசொல்லும்
ஒவ்வாதோரின் மனதை வெல்லும்

தோற்றத்தில் கீரலாய் வந்து
தோற்றுவித்த சிந்தனைச் சிறப்பு

மாற்றத்தை மதியிலேற்றி
மனத்திரையில் வரைந்து பழகு
ஏற்றமாய் உருவெடுத்து
ஏகமாய் உயர்ந்து நிற்கும்
ஓவியக்கலை உயிர்பெற்று
ஒளியாய் மிளிர்ந்திருக்கும்

ஏற்றமுள்ள ஓவியத்தை
எந்நாளும் தீட்டிப்பழகு
தாக்கத்தினை போக்கும் மருந்து
தனதுள் மறைந்திருக்கும்
திறமைகளுள் ஒன்று
அதிரை மெய்சா
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 23-01-2014 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.
 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.