Sunday, January 12, 2014

சகுனம்


நாள் பார்த்து நேரம் பார்த்து
நடத்திடும் நற் காரியங்கள்
நாளிகையில் துயர் நிகழ்வாய்
நடந்திடுதே நாள்தோறும்
நாமொன்று நினைக்கையிலே
நாளொன்று நினைத்ததேனோ
நெறி தவறிப் போனதாலே
சகுனத்தின் சாபம் தானோ


சனி பார்த்து சகுனம் பார்த்து
சாதிசனம் ஒன்று கூடி
செய்திட்ட சுப நிகழ்வு
சோகத்தில் சிக்குண்டு
சூனியமாய் ஆவதேனோ
சூட்சமத்தின் மாயைதானோ

சடங்குகள் சம்பிரதாயங்கள்
சகலமும் நடத்திட்டு
மணமுடித்த மறுநாளே
மாங்கல்யம் அறுபடவே
எச்சகுனம் காரணமாம்
யாரிடம் போய்க் கூறுவதாம்

ராகு கேது குளிகையென
ரகமாய் ச்சகுனம் பார்த்தபோதும்
தூரத்து உன் பயணம்
துயரத்தில் விடிவதேனோ
துயருறுவது சகுனமும் தானோ

படைத்தவனின் பாதையிலே
பாருலகில் நடந்து வந்தால்
அனைத்திலுமே நற்ச்ச்சகுனம்
ஆகிடுமே அகிலம் முழுதும்

மூடத்தை மூட்டை கட்டி
மூளைக்கு நீ வேலைகொடு
பகுத்தறிவை பாவித்து
பாவச் சொல்லிற்குப் பாடைகட்டு

சகுனத்தில் நற் சகுனம்
சலனமற்ற நல்லெண்ணம்
இறை மறை கூறுவதோ
சகுனத்தில் சக்தியில்லை
சாபமொன்றே இதற்க்கு எல்லை

இறை வகுத்த நல் வழியை
எந்நாளும் கடைபிடித்தால்
இனி நமக்கு சகுனமெதற்கு
ஈருலகை வெல்வதற்கு
அதிரை மெய்சா
குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 03-07-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...

youtube-ல் என் கவிதை 19.15 வது நிமிடத்திலிருந்து ஆரம்பமாகும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.