Sunday, December 29, 2013

வேலி !


தாரமே வேலியாய்
தற்க் காத்திடும் மந்திரம்
தாய்தந்தை வேலியாய்
தன்வாழ்வை சீர்படுத்தும்


பயிரையும் காத்திடும்
உயிரையும் காத்திடும்
பாரினில் வாழவே
பாதுகாப்பது வேலியே

மானத்தை காப்பது
மனமெனும் வேலியே
மதியுணர வைப்பது
அளவெனும் வேலியாய்

வேலியை அமைத்த பின்
மாளிகை கட்டினால்
நாளொரு பொழுதெல்லாம்
நலமுடன் விடியுமே

வேலியில்லா யாதுமே
வீதியில் துதி பாடும்
வீண்பழி சுமப்பதும்
வேலியின் சாபமே

மாளிகை யானாலும்
மண் குடிலானாலும்
வேலியே காவலாய்
வீரமாய் நின்றிடும்

வேலியே பயிரையும்
மேய்ந்திடும் காலமாம்
நாளிகை பொழுதினில்
நடந்திடும் கொடுஞ்செயல்

மாற்றங்கள் வாழ்வினில்
ஏற்றமாய் மகிழ்விக்கும்
மனத்தினின் வேலியே
ஏணியாய் உயர்த்திடும்

மனிதரில் புனிதரை
கனிதரும் மரத்தினை
அறிந்திடல் சிறந்ததே
அரவணைக்கும் வேலியாய்

அன்பெனும் வேலியை
அகிலமும் அறியுமே
பண்பெனும் பாதையில்
பயணித்தால் இலாபமே

வேலியை அமைத்திடு
எல்லைகள் வகுத்திடு
வீரனாய் வாழ்ந்திடு
வாழ்வினில் சிறந்திடு
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 10-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. இக்கவிதை காணொளியில் 39.15 வது நிமிடத்தில் உள்ளது. அதன் காணொளி இதோ...

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.