Monday, November 18, 2013

எதிர்பார்ப்பு !


பாருலகில் வாழும் மக்கள்
பாவச்செயல் செய்யாதிருக்க
படைத்தவனின் எதிர்பார்ப்பு

பண்டுதொட்டுக் காத்துவந்த
பாரம்பரிய கலாச்சாரம் நிலைக்க
பெரியோர்களின் எதிர்பார்ப்பு

கள்ளமில்லா உள்ளமதில்
எல்லையில்லா அன்பிருக்க
இல்லத் தலைவனின் எதிர்பார்ப்பு

பிள்ளைகளின் பழக்கவழக்கம்
எல்லையுடன் அமைந்திருக்க
பெற்றோர்களின் எதிர்பார்ப்பு

பள்ளி வரும் பிள்ளைகளோ
பாடத்திலே கவனம் செலுத்த
ஆசானின் எதிர்பார்ப்பு

விளைநிலங்கள் தழைத்து நிற்க
பருவம் தவறா மழை பெய்ய
விவசாயிகளின் எதிர்பார்ப்பு

கானகத்தில் பொழியும் மழை
மாநகரில் பொழிந்திடவே
மக்களின் எதிர்பார்ப்பு

காவிவந்த கவிதையினை
காலமெல்லாம் போற்றிக்காக்க
கவிஞர்களின் எதிர்பார்ப்பு

காசுபணம் பெருகினாலும்
மாசுபடியா நேசம் நிலைக்க
நட்பின் எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு ஏற்றமாய் அமைந்து
எந்நாளும் இணைந்திருக்க
மணமக்களின் எதிர்பார்ப்பு

எதிர்ப்பார்ப்பில் உலகு இயங்க
சிரம்தாழ்த்தி இறை வணங்க
நிறைவாக்கி அனைவருமே
நிம்மதியில் நாள்கழிக்க
அனைத்து ஆன்மாக்களின் எதிர்பார்ப்பு

அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 24-10-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது. அதன் காணொளி இதோ...
 

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.