ஆழ்மனதில் ஆட்கொண்டு
எண்ணி ஏங்கும் இளஞ்சர்கள் கண்டு
ஏளனமாய் அவனும் நினைத்து
பட்டம் படித்த பாலகர்கள்
பால் மனதில் பகல் கனவு
நித்தம் ஒரு கனவுகளில்
நிம்மதி இல்லா அவலம் பார்த்து
ஏங்கி நின்றான்...!
சட்டம் சொல்லும் தேசிய நாட்டில்
சன்னதி வளர்த்த சான்றோர்கள்
பணியில்லா பட்டதாரிகள் பக்கம்
முகம் திருப்ப
மறந்ததை எண்ணி
ஏங்கி நின்றான்...!
தேசிய நாட்டில் கல்வி கற்று
தெருமுனையில் கடலை விற்று
திறமைகள் மறையும்
அவலம் எண்ணி
ஏங்கி நின்றான்...!
வளர்ந்து வரும் பாரதநாட்டை
வலிமையாய் கொண்டு செல்ல
இன்றைய கால இளஞ்சர்களை
என்று இணைப்பர் அரசியலில்
என்றெண்ணி
ஏங்கி நின்றான்...!
கலாம் என்றொரு இமயமலை
கனாக்கண்ட அந்த நோக்கம்
வருங்கால இந்திய நாட்டை
வளமுடனே ஆக்கிடக்கண்டு
கண்மூடி மறைந்திடவே
ஏங்கி நின்றான்...!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.