Friday, October 4, 2013

[ 1 ] ஏங்கி நின்றான்...! ஏக்கம் தொடர்கிறது....


பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்...
பகல் உணவில் கூட பால் தந்த ...
அந்த அன்னையின் பாசம்...
இன்று தூரமாகி போனதை எண்ணி...
ஏங்கி நின்றான்...!

பள்ளிப்பருவம் எட்டியதும்...
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து...
பாடசாலை அனுப்பி வைத்ததை நினைத்து...
ஏங்கி நின்றான்...!

படித்தது போதும் என்று...
பாதிலேயே கல்வி விட்டு....
பன்னாட்டு விமான நிலையம் கண்டு...
புலம்பெயரும் கனவுகள் சுமந்து...
பாசத்தை தூரமாக்கி....
ஏங்கி நின்றான்...!

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து...
வரதட்சணை கண் மறைத்து...
வாயாடிப் பெண்ணை மணந்து...
அன்புக்காக...
ஏங்கி நின்றான்...!

வாப்பாவை பார்க்காமலே..
வாப்பாவின் பாசம் அறியாமலே .....
மூன்று வயதை தொடும்போது தாயகம் போய்........
தான் ஈன்ற தங்கப்பிள்ளை........
தன்னிடம் வருமா என்று ....
ஏங்கி நின்றான்...!

சுற்றித்திரிந்த காலங்களில் சுதந்திரம் கற்றுத்தந்து...
பட்ட கஸ்டங்களில் பாதி பங்கெடுத்த...
அன்பு நண்பர்களை பிரிந்து...
ஏங்கி நின்றான்...!

அயல்நாட்டு நிரந்தர வாழ்க்கை...
நிரந்தரமாக அந்நியமாக்கி...
அனாதை போல் வாழ்ந்து விட்டு...
முதுமை அடைந்தும் அறியாமல்...
முடியாமல் ஊர் திரும்பும் காலம் வந்து...
உறவுக்காகவும்....உண்மையான அன்புக்காகவும்...
ஏங்கிநின்றான்...!

அதிரை மெய்சா
ஏக்கங்கள் தொடரும்...

2 comments:

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.