Friday, September 20, 2013

விவசாயி !




 பசுமைகள் தழைத்திட்டு
பாசனங்கள் மிகைத்தோடும்
நஞ்சையும் புஞ்சையும்
நகைப்புடனே பேசிடுமாம்
நம்நாட்டு விவசாயிகளைப் பார்த்து


அதிகாலை பொழுதினிலே
முகம் மலர்ந்து விழிக்கையிலே
குளிர்க்காற்று கொஞ்சிடவே
குருவி சப்தம் கேட்டிடவே
கருவாடு கஞ்சிகட்டி
கலப்பை கருக்கரிவாளென கையிலெடுத்து
வாய்க்காலில் முகம் கழுகி
வரப்போரம் சென்றிடுவார்
வாஞ்சையோடு நம் விவசாயிகள்

நாள் பொழுதும் வயல்வெளியில்
நா காய மடையை வெட்டி
சேர்நீரில் கை நனைத்து
சேர்ந்து பாடி நட்டிடுவர்
சோறு போடும் நாத்து கன்றை
சொல் காக்கும் விவசாயிகள்

மடை நீரை திறந்திடவும்
மணலிட்டு தடுத்திடவும்
அடைமழையில் நனைந்திட்டு
அடிமனதில் கவலையுடன்
நடுநிசியில் சென்றிடுவார்
நாடு போற்றும் விவசாயிகள்

தை மாதம் கருதறுத்து
அறுவடையில் அகம் மகிழ்ந்து
அள்ளி வழங்கும் திருநாளாம்
அன்புத்தமிழர்களின் பொன்னாளில்
அப் பொங்கல் தினம் அனுசரித்து
பூரிப்புடன் பாடி மகிழ்பவர் விவசாயிகள்

இயற்கையின் சீற்றத்தால்
ஈடில்லா இழப்பெய்து
துயருற்று இருந்த போதும்
துணிவாக எதிர்கொண்டு
கரம் பிடித்து கை கோர்த்து
கலங்காது நிற்பவர்கள் விவசாயிகள்

நெல் கரும்பு பயறு என்று
இயற்கை தாவரங்கள்
அத்தனையும் விதைத்து
இவ்வுலகை வியக்கச்செய்த
சாதனையாளர்களே விவசாயிகள்

எண்ணற்ற பயிர் விளைத்து
ஏற்றுமதியில் சாதனை புரிந்து
பன்னாட்டு சந்தைகளில்
பற்பல தானியங்கள்
பார்ப்போர்கள் வியந்திடவே
பார்போற்றி பேசப்படுபவர்
பால் மனம் படைத்த விவசாயிகள்

உலக மக்கள் ஒன்று கூடி
உவகை பாடி பாராட்டிடவே
விவசாயிகளின் உழைப்பிற்கு
வாய் மொழியில் சொல்லில்லை
வாழ்த்திடவும் வார்த்தையில்லை...!

அதிரை மெய்சா

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.