Friday, September 20, 2013

பொவுனு பொவுனுதான் !



 பூஞ்சோலைக்கிராமம் பெயருக்கேத்த மாதிரி திரும்பும் திசைகளிலெல்லாம் பசுமைகளும், பூ மரங்களும் நிறைந்த அழகிய கிராமம். அந்த கிராமத்திலேயே அழகுப் பதுமையுடன் அமைதியான குணம் கொண்ட ஆத்தாவை மட்டுமே உறவு கொண்ட பூப்பெய்து பூமரமாய் நிற்கும் அழகிய மங்கைதான் இந்த கவிதையில் வரும் பொவுனு.



பெயரளவில் பொவுனு என பெயர் தாங்கி இருந்தாலும் அவள் ஒரு ஏழை ஆத்தாவை மட்டுமே சொந்தமாக கொண்டவள். ஆனால் அவளும் ஒரு பெண் தானே..! அவளுக்கும் உலக ஆசைகள் இருக்கத்தானே செய்யும்.
 அவள் ஆசைப்பட்டது. பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு ஜோடி தங்க தொங்களுக்குத்தான். ஆசைப்பட்டதை ஆத்தாவால் வாங்கி கொடுக்க முடிய வில்லை இருந்தாலும் அவளின் ஆசையை கவரின் தொங்களால் தீர்த்து வைக்க முடிந்தது. அதுவும் அவளுக்கு ராசி இல்லை போலும். வாங்கிக்கொடுத்த மூன்று நாளிலேயே பொவுனென நினைத்து வழிப்பரியன் அடித்துச்சென்றான். பறிகொடுத்தவள் சோகம் தீர்க்க சுக வாழ்க்கை வாழ வைக்க பணக்கார கிழவருக்கு மம் முடித்து கொடுக்க அந்த ஏழை ஆத்தா நினைத்தாள். அந்த வாழ்க்கை அர்த்த மற்றது என நினைத்து தான் ஏழ்மையாய் பிறந்ததை எண்ணியே ஏங்கி உறங்கியவள் மூர்ச்சையானாள்...! மூர்ச்சையடைந்தாள்...! ஆமாம் என் கவிதை பொவுனு இறந்து விடடாள்.

எல்லாம் இந்த பொவுனு விக்கிற விலையினால் தானே...!?
பொவுனு பொவுனுன்னு
புலம்பல் சப்தம்
தூக்கத்தில் கூட
அவளால் விலைக்கு
வாங்க முடியாத
விலை

ஏக்கத்தை தீர்த்து வைக்க
ஆத்தா வாங்கிக்கொடுத்த
கவரிங் செயின்
கழுத்தில் மின்ன
அதையும்
ஒரு வழிப்ப்றியன்
பறித்துப்போனான்

புலம்பல் சப்தம்
நின்று
அமைதியாய் அவள்
உறங்கப்போய்

மீண்டும்
அதிர்ச்சியில்
விழித்தெழுந்த
பொவுனு

ஆத்தா முகம் பார்த்து
விழிதனில்
கண்ணீர் மழை

ஏன் ஆத்தா
இந்த கிவழருக்கா
நான் முந்தி விரிக்க
எனக்கேட்க
அருகில் வந்த
ஆத்தா
அழாதே என்
அருமை
பொவுனே

அவருக்கு
நஞ்சையும்
புஞ்சையும்
சேர்த்து
நாப்பதேக்கர்
நில மிருக்கு
அவர நீ
கட்டிக்கிட்டா
ஆனந்தமா
வாழலாம்
பொவுனு

ஆத்தா
சொன்னதை
கேட்டு
வாயடைத்துப்போய்
படுக்கைக்கு
சென்றவள்

மீண்டும்
பொவுனின்
புலம்பல்
சப்தம்

சற்று நேரத்தில்
நிசப்தம்

கண் விழித்து
பார்த்த
ஆத்தா
கண்ணில்
கண்ணீர் மழை

ஆமாம்
பொவுனு
மூர்ச்சை
அடைந்திருந்தாள்

அதிரை மெய்சா

குறிப்பு :
இது ஒரு கற்பனைக் கதை / கவிதை விழிப்புணர்வுக்காக

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.