
நான் அறிமுகமானநேரம்...
என்னை அணைத்து மகிழ்ந்தோர்...
தன் பிள்ளைகளை அணைக்க மறந்தனர்..!
என்னைக்கையாள்வோர் அனைவருக்கும்...
நான் மட்டுமே செல்லப்பிள்ளை...!
என் மீதுகொண்ட காதல்...
யார் எவர் மீதும் கொண்டதில்லை...!
தூக்கம், பசி கூட மறக்க வைப்பேன்...
ஏக்கம் பலவற்றை தீர்த்து வைப்பேன்..!
பற்பல வலைத்தளம் போக வைப்பேன்...
பல சிந்தைகள் யாவும் சிதறச் செய்வேன்..!
மனக்கணக்கை மறக்க வைப்பேன்...
மனதினில் என்னை நினைக்க வைப்பேன்...!
வலைதள உறவினை விரியச் செய்தேன்...
வாழ்கையில் உன்னை உயரச் செய்தேன்...!
அரசு மேல் நிலைபள்ளிகளுக்கெல்லாம்...
அடியேன் நானும் வந்துவிட்டேன்...!
இனி ஆரம்பமாகும் பள்ளி முதல்...
ஆரம்பப்பள்ளிகள் வரை நான் இருப்பேன்..!
பட்டிதொட்டிகளிலெல்லாம் என் இருப்பு...
பாமரரும் அறிந்துகொண்டனர் என் திறப்பு...!
என் வருகையின் தனிச்சிறப்பு....
என்னை வளம் வருது உலக மதிப்பு...!
என்னைக் கண்டவனை யாவரும் மறந்தாலும்...
என்னைக் காண யாவரும் மறந்ததில்லை...!
ஆன்ட்டிவைரஸ் இட்டு உபயோகித்தால்...
ஆண்டாண்டு காலம் நான் வாழ்வேன்...!
அளவோடு என்னை கையாண்டால்...
ஆபத்தில்லாமல் நான் இருப்பேன்...!
அடுத்த கண்டுபிடிப்பு காணும் வரை...
அதுவரை உன்கையில் நான் தவழ்வேன்...!
இனி எத்தனை கண்டுபிடிப்புக்கள் வந்தாலும்...
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.