Friday, September 13, 2013

சவாரி

ரெட்டெமாட்டு வண்டி பூட்டி
ரோடு குலுங்க ஜல்ஜல் ஒலியில்
சகட்டு மேனி அணிவகுத்து
பகட்டுடனே பாடிமகிழ்ந்து
ரம்மியமாய் போயிடுவர்
நம்ம நாட்டு சவாரிக்காரர்

குதிரையிலும் போகலாமே
குண்டுமல்லி பூவும் வாங்க

மதுர போயி வாங்கி யரலாம்
மணங்கமழும் ஜாதிமல்லி
மனம் மகிழ சவாரி செஞ்சி

கார் ஓட்டக் கற்ற உந்தன்
கவனங்கள் சிதறாமல்
தேர் போல நேர் பார்த்து
தெருப்பக்கம் பார்த்துச்செல்லு
தென்படுமாம் புது வளைவு
கண்படவே விழித்துக்கொள்ளு

பள்ளம் மேடு பார்த்து சென்று
பகலுறக்கம் தூரக்களைந்து
பார்போற்றும் சவாரியாய்
பாதுகாத்துச் சேர்த்திடுவாய்

ஆட்டோ ரிக் ஷா ஏற்றிச்செல்லும்
அனுதினமும் பள்ளிச்சவாரி
அக்கம் பக்கம் பார்த்துச் செல்லு
அன்பாய்க் குழந்தை அணைத்துச் செல்லு
கவனத்துடன் நீ சென்றால்
சுவனத்திலும் இடம் கிடைக்கும்

ஊருதெருவில் உறுமுமிந்த
ஈரு சக்கர வாகனங்கள்
சாகசத்தில் பறந்து சென்று
சவாரியாய் முந்திச் சென்று
சோக நிகழ்வு நிகழ்த்துகிறாய்
சொல்லி மாலா துயர் அடைகின்றாய்

கழுதையிலும் ஏறிடுவர்
கனவுலகில் மிதந்திடுவர்
எதிலுமொரு துணிவுவேண்டும்
எட்டிநின்றால் பலன் கிடைக்கும்
அதுவுமொரு சவாரியாம்
அழுக்கு மூட்டை சுமப்பதுமே

மதியுடனே செயல்பட்டு
மிதிவண்டிப் பயணம் போனால்
உடலுக்கும் வலிமை சேர்க்கும்
உணர்வுக்கும் பயனளிக்கும்
மனம் மகிழ சவாரி செய்தால்
உடல் நலமும் குணம் பெறலாம்

சவாரியே தொழிலாய்ச் செய்யும்
சளைப்பில்லா உழைக்கும் வர்க்கம்
முஹாரியில் ராகமெடுத்து
முந்திச்சென்று மகிழ்விப்பர்

முழுப்பொழுதும் வெற்றி கண்டால்
முடிவில்லா இன்பம் பயக்கும்
சிறப்புடனே வாழ்ந்திடுவோம்
சீராய்ச் சவாரி மேற்கொண்டு
அதிரை மெய்சா

குறிப்பு : இந்தக் கவிதை கடந்த [ 15-08-2013 ] அன்று இலண்டன் தமிழ் வானொலியின் கவிதை நேரம் நிகழ்ச்சியில் ஒலிப்பரப்புச் செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துக்களை நாகரீகமாக பதியவும். பதிவில் ஏதும் பொருள் குற்றம் கண்டால் மின் அஞ்சல் மூலமாக தெரியப்படுத்தவும்.